Salamah Farm House

Salamah Farm House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salamah Farm House, Pet service, 672/12, N. C. Road, Trincomalee.

கோழி வளர்ப்பில் எதிர்கொள்ள சவால்களும் அவற்றை சரிசெய்யும் வழிமுறைகளும்.1.கோழிகளுக்கு அடிபட்டு அல்லது வேறு வகையில் காயங்கள...
29/10/2021

கோழி வளர்ப்பில் எதிர்கொள்ள சவால்களும் அவற்றை சரிசெய்யும் வழிமுறைகளும்.

1.
கோழிகளுக்கு அடிபட்டு அல்லது வேறு வகையில் காயங்கள் ஏற்பட்டு விட்டால் குப்பைமேனி மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக அரைத்து காயங்களில் பூசினால் சீக்கிரம் மாறி விடும்.

காயங்கள் சாதரணமாக சில நாட்களில் மாறி விடும். ஆனால் அதன் மூலம் அம்மை அல்லது வேறு நோய்கள் கோழிகளுக்கு பரவி விடும்.

2.
புதிதாக பொரித்த குஞ்சுகளுக்கு சளி ஏற்படும் போது கற்பூரவள்ளி இலையை அரைத்து அதன் சாற்றினை நீருடனோ அல்லது வாய் மூலம் நேரடியாகவோ கொடுக்க 2 நாட்களில் சரியாகும்.

3.
கோழிகள் அல்லது குஞ்சுகள் மிக சோர்வாக காணப்பட்டால் அவற்றிற்கு வாழை இலையின் தண்டை நன்றாக அரைத்து நீருடன் கலந்து கொடுத்தால் சிறிது நேரத்தில் சுறுசுறுப்பாக ஆகி விடும்.

4.
கோழிகளுக்கு உடலில் சிராய்ப்புக்கள் அல்லது வெப்பத்தின் மூலம் ஏதாவது கட்டிகள் ஏற்பட்டு இருந்தால் வெப்பிலையுடன் குப்பை மேனியை நன்றாக அரைத்து அவற்றின் மீது பூசினால் சீக்கிரம் குணமாகும்.

5.
அடை தெளியாமல் இருக்கும் கோழிகளை அடை தெளிய வைக்க நன்றாக நீரில் நனைத்து பின்னர் சிறிது நேரம் வெயிலில் விட சீக்கிரம் அடை தெளிந்து இயல்பு நிலைக்கு வரும்.

6.
கோழிகளின் வால் மற்றும் இறகு பகுதிகளின் ஓரங்கள் அரிப்பு ஏற்பட்டு போல் இருந்தால் அவற்றின் மீது கருவாடு கழுவிய நீரினை தெளித்து வந்தால் சரியாகும்.

7.
கோழிகளின் உடலில் இறகுகள் உதிர்ந்து அல்லது காயமடைந்த இடங்களில் இறகுகள் வால்கள் அறுபட்டு இருந்தால் கருவாடு கழுவிய மீதி நீரினை தெளித்தால் சீக்கிரம் வளரும். அத்துடன் இறகுகள் மினுமினுப்பாகவும் காணப்படும்.

8.
முட்டை அடை வைக்கும் போது அதிக பொரிப்பு திறனை பெற சரியான வடிவம் உள்ள முட்டையினை தெரிவு செய்யுங்கள். முட்டையின் ஓடுகளில் வளைவுகள் அல்லது பள்ளங்கள் இருந்தால் அந்த முட்டைகள் கருக்கட்டாது.

வட மாகாண விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள கோழி வளர்ப்பு தகவல்Tnx : SLBI Admin
23/06/2021

வட மாகாண விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள கோழி வளர்ப்பு தகவல்
Tnx : SLBI Admin

கோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள் கோழிகளின் இனங்கள்கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட...
18/06/2021

கோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்

கோழிகளின் இனங்கள்

கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க கோழியினங்கள்
ஆசிய கோழி இனங்கள்
ஆங்கில கோழி இனங்கள்
மத்திய கோழி இனங்கள்

கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1) முட்டைக்கோழி இனங்கள் - Eg.வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா
2) இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.கார்னிஷ்,பிளை மவுத் ராக், பிரம்மா
3) இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்
4) விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.அசீல்
5) அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg. சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்
6) உள்நாட்டின கோழியின இனங்கள் - Eg. கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.

இந்திய கோழியினங்கள்

இந்தியாவில் நான்கு தூய கோழியினங்கள் உள்ளன. அவையாவன. அசீல், சிட்டகாங், பர்சா மற்றும் கடக்நாத்

1. அசீல்:

அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை.
அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகளாவன, பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும் சிவப்பு), நியூரி (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கருப்பில் வெள்ளை நிறப் பொட்டுகள்), ஜாவா (கருப்பு), சப்ஜா (வெள்ளை மற்றும் தங்க நிறம் அல்லது கருப்பு கலந்த மஞ்சள் நிறம் அல்லது வெள்ளி), டீகார் (பழுப்பு), ரேசா (இளஞ்சிவப்பு), பீ கோம்ப் எனும் கொண்டை அமைப்பு, நல்ல சிவப்பு நிறமுடைய தாடி மற்றும் காது மடல்கள், நீண்ட கழுத்து, பலமான கால்கள்.

2. சிட்டகாங்:

சிட்டகாங் கோழியினம் மலாய் என்றும் அறியப்படும்.
இந்த கோழியினம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது.
சிட்டகாங் இனத்தின் பிரபல வகைகளாவன, பஃப், வெள்ளை, கருப்பு, அடர்ந்த பழுப்பு, சாம்பல் நிறம்.
பீ கொண்டை, சிவப்பு காது மடல்கள், நீண்டு தொங்கும் கண் இமைகள், இறகுகள் அற்ற கொண்டைகள்.

3. கடக்நாத்:

கடக்நாத் கோழியினத்தின் தோல், அலகு, தாடி, கால் விரல்கள் மற்றும் பாதம், போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
இக்கோழியினத்தின் கொண்டை, தாடி, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இந்த கோழியினத்தின் உட்புற உறுப்புகள் அடர் கருப்பு நிறத்திலும், அதன் தசைகள், தசை நார்கள், நரம்புகள், மூளை கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிறம் மெலனின் நிறமி கலந்திருப்பதால் கருப்பு நிறம் இருக்கும்.

4. பர்சா :

பர்சா இனம் நடுத்தர உடல் வாகுடைய, இலகுவான எடையுடைய, எப்போதும் கவனுத்துடன் உஷாராக இருக்கும்.
இவற்றின் முட்டையிடும் திறன் குறைவு.
இவற்றின் தோல் நிறம் வேறுபடும்.

குறிப்பு :

அர்க்கானா அமெரிக்க கோழி இனமாகும். இக்கோழி இனங்கள் ஊதா, அல்லது பச்சை நிறத்தில் முட்டைகளை இடுகின்றன.
ஆசீல் சண்டையிடும் திறன் வாய்ந்த உள்நாட்டின கோழியினமாகும்
ஆசியன் இன கோழியினத்தில், இறகுகள் தலையினை நோக்கி சுருண்டிருக்கும்
சில்க்கி ஆசியாவைச் சேர்ந்த கோழியினமாகும். இவ்வினத்தின் அடைகாக்கும் திறன் அதிகம்.
வெள்ளை லகார்ன் கோழியினம் முட்டையிடுவதற்கு மிகவும் ஏற்ற மிகவும் பிரபலமான இனமாகும்.

கலப்பின கோழியினங்கள்
இந்த கோழியினங்கள் பல்வேறு விதமான தூய கோழினங்களை இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை கலப்பினம் செய்து உருவாக்கப்படுகின்றன. இவை வணிக ரீதியாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றின் முட்டையிடும் மற்றும் வளரும் திறன் அதிகம். இவற்றின் கலப்பின வீரியம் அதிகம்.

1) பொதுவாக முட்டைக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :

பிவி 300, ஐஎஸ்எ பாப்காக், போவன்ஸ், யூரிபிரீட், ஹைலைன், டெகால்ப், லோமேன், கீஸ்டோன், எச் & என் நிக் சிக் போன்றவை.

2) பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :

காப், ராஸ், ஹப்ரோ, ஹப்பார்ட், ஸ்டார்புரோ,ஏவியன் 34, அனாக் 2000, ஆர்பர் அக்ர்ஸ், ஹப் சிக்ஸ், பீட்டர்சன் போன்ற இதர இனங்கள்

கோழியினங்களின் கொண்டைகளின் பல்வேறு வகைகள்

கோழிகளின் தலையின் மேல் பகுதியிலுள்ள சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் இனத்திற்கேற்றவாறு அவற்றின் கொண்டை அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். கோழிகளின் கொண்டை அமைப்பு அவற்றின் மரபுப்பண்புகளைப் பொறுத்து இருக்கும். ஆனால் கொண்டையின் அளவு அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைப் பொறுத்தும், எவ்வளவு ஒளியில் அவை வளர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் இருக்கும். பல்வேறு வகையான கோழிகளின் கொண்டை அமைப்புகள் பின்வருமாறு.

1) தனியான கொண்டை அமைப்பு:
கோழிகளின் கொண்டை அமைப்பானது, அதை முன்னாலிருந்து பார்க்கும் போது குறுகியதாகவும், அதிலிருந்து கொம்புகள் போன்று நீட்டிய அமைப்புகளும் இருக்கும். அதாவது ஒரு பிளேடு போன்ற தட்டையான அமைப்பில் விளிம்புகளுடன் கூடிய கோழிகளின் தலை மீது இருக்கும் சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் கொண்டையிலுள்ள கத்தி போன்ற வெட்டுப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை கொண்டைகளின் வகைக்கேற்ப மாறுபடும். மேலும் கோழிகளின் கொண்டையிலுள்ள இந்த அமைப்புகள் கோழிகளின் இனத்திற்கேற்ப வேறுபடும். வெள்ளை லகான் கோழிகளின் கொண்டையில் 5 வெட்டுப்பட்ட அமைப்புகளும், ஆர்ஐஆர் மற்றும் மைனார்கா இனக் கோழிகளின் கொண்டைகளில் 6 வெட்டு அமைப்புகளும் இருக்கும். ரோஸ் மற்றும் பீ கொண்டை அமைப்புகளின் கீழ்ப்பட்ட கொண்டை அமைப்பு தனிக் கொண்டை அமைப்பாகும்.

2) பீ எனும் கொண்டை அமைப்பு
இந்த கொண்டை அமைப்பு மூன்று கொண்டை அமைப்பாகும். அதாவது மூன்று தனிக்கொண்டைகள் அவற்றின் அடிப்பகுதியில் சேர்ந்தது போலும், மேற்பகுதியில் மூன்றாக பிரிந்து இருப்பது பீ எனும் கொண்டை அமைப்பாகும். இந்த மூன்று கொண்டைகளில் நடுவிலுள்ள கொண்டை மற்ற இரண்டை விடப் பெரியதாக இருக்கும். சுத்தமான பிரம்மா கோழி இனங்களில் இந்த வகைக் கொண்டை அமைப்பு இருக்கும்.

3)ரோஸ் கொண்டை
இக் கொண்டை அமைப்பு அகன்ற கொண்டையாக, அதன் மேற்பகுதியில் தட்டையாகவும் சிறிய செவ்வக வடிவ அமைப்புகளும் இருக்கும். இந்த செவ்வக வடிவ கத்தி போன்ற அமைப்புகளின் நீளமும் அகலமும் கோழிகளின் இனத்திற்கேற்ப மாறுபடும்.
Eg. வியன்டோட்

4) ஸ்ட்ராபெரி அல்லது வால்நாட் கொண்டை அமைப்பு
இந்த வகைக் கொண்டை அமைப்பு ஸ்ட்ராபெரி பழத்தின் அரைப்பகுதி போன்று இருக்கும். கொண்டையின் மேற்பகுதி ஸ்ட்ராபெரி பழத்தின் மேற்பகுதி போன்று இருக்கும். இது சிறியதாகவும் அவற்றின் மேற்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ரோஸ் மற்றும் பீ கொண்டை உடைய கோழிகளை கலப்பினம் செய்யும்போது கிடைக்கும் கலப்பினக் கோழிகள் அனைத்தும் வால்நட் கொண்டையினைப் பெற்றிருக்கும். இதற்கு ஆர் மற்றும் பி ஜீன்களின் சேர்ந்த வெளிப்பாடாகும்.
Eg. மலாய்ஸ் கோழி இனம்

5) வி வடிவ கொண்டை அல்லது டியூப்லெக்ஸ் அல்லது கொம்பு வடிவ கொண்டை
இந்தக் கொண்டை கொம்பு போன்று இருக்கும். ஆனால் பொதுவாக இந்த கொண்டை அமைப்பு ஆங்கில எழுத்து 'வி' போன்று இருக்கும். இந்த கொண்டையானது கோழிகளின் அலகிலிருந்து ஆரம்பித்து இரண்டாக பிரிந்து, அதன் அடிப்பகுதியில் தடிமனாகவும், மேல் பகுதியில் கூர்மையாக, மெல்லியதாகவும் இருக்கும். Eg. ஹூண்டன்ஸ் கோழியினம்.

6) குஷன் கொண்டை
இந்த கொண்டை அமைப்பு உருண்டையான சதை அமைப்புடன் அதன் மீது கூர்மையான அமைப்புகள் இருக்கும். இக்கொண்டையின் மத்தியில் நீண்ட பள்ளம் காணப்படும் Eg.சில்க்கி கோழியினம்.

7) குவளை போன்ற கொண்டை
இந்த கொண்டை அமைப்பு ஒரு தேநீர் குவளையைப் போன்று அதன் விளிம்புகளில் கத்தி போன்ற அமைப்புகள் இருக்கும் Eg. சிலிக்கன் பட்டர்கப் இனம்.

கோழிகளைக் கையாளுவதற்கான தேவை

கோழிகளுக்கு நோய் ஏற்பட்டிருப்பதை கண்டறிய

கோழிகளை தேர்ந்தெடுப்பதற்கும், பண்ணையிலிருந்து நீக்குவதற்கும், அவற்றின் திறனை அளவிடவும்
தடுப்பூசி அளிக்கும்போதும், பரிசோதனையின் போதும், கோழிகளுக்கு அடையாளங்களை இடுவதற்கும், அலகினை வெட்டுவதற்கும், கொண்டையினை வெட்டுதற்கும், செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கும், தனித்தனியாக கோழிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும்
கோழிகளின் வெளிப்புற உடல் அமைப்பைப் பற்றி படிப்பதற்கு
கோழிகளை விற்கும்போது அவற்றைப் பிடிப்பதற்கு
கோழிகளைக் கையாளுதல்
மேற்கூறிய செயல் முறைகளுக்காக கோழிகளை அவை ஆழ்கூளத்தரையில் வளர்க்கப்பட்டால் அவற்றைப் பிடிக்கவும், கூண்டு முறைகளில் வளர்க்கப்பட்டால் அவற்றை கூண்டுகளை விட்டு வெளியே எடுக்கவும் வேண்டும்.

ஆழ்கூள முறையில் கோழிகளைப் பிடிக்கும் போது அவற்றைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தும் கொக்கிகளை அவற்றின் காலில் போட்டோ அல்லது அவற்றின் கால்களை நம் கைகளால் பிடித்தோ தூக்கவேண்டும். கோழிகளை எப்போதும் அவற்றின் கழுத்தைக் கொண்டோ அல்லது இறகுகளைப் பிடித்தோ தூக்கக்கூடாது. அவற்றுக்கு மருந்து அளிப்பது போன்ற இதர செயல்முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக கோழிகளை பிடித்து நம் கைகளில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்போது கோழிகளின் இறகுகளைப் பிடித்திருப்பதால் அவற்றின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.
கூண்டுகளிலிருந்து கோழிகளை எடுக்கும் போது, அவற்றின் தலையை கழுத்துடன் சேர்த்து முதலில் வெளியே வருமாறு அவற்றின் உடலை இறக்கைகளுடன் சேர்த்து நம்முடைய இரண்டு கைகளால், கோழிகளுக்கு காயம் ஏற்படாமல் எடுக்கவேண்டும். இதே செயல்முறையினை கோழிகளை கூண்டுக்குள் போடும் போது பின்பற்றவேண்டும். அதாவது தலை முதலில் கூண்டுக்குள் போகுமாறு வைத்து பிறகு அவற்றின் உடல் உள்ளே போகுமாறு போட வேண்டும்.

கோழிகளை பரிசோதிப்பதற்காகப் பிடிக்கும்போது அவற்றின் அடி வயிற்றுப்பகுதி நம்முடைய உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து அவற்றின் இரண்டு கால்களையும் நம்முடைய விரல்களால் நன்றாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு வைக்கும்போது கோழிகளின் தலை பரிசோதிப்பவரை நோக்கி இருக்குமாறு நம்முடைய கையில் வைக்க வேண்டும். ஒரு கையால் கோழியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நாம் அவற்றைப் பரிசோதிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கோழிகளைப் பரிசோதிக்கும் போது கோழிகளுக்கு அயற்சி எதுவும் ஏற்படாமல் மென்மையாகக் கையாளுவதால் அவை உதறுவதைத் தடுக்கலாம்.

கோழிகளில் முட்டை உருவாதல்

கோழிகளில் மஞ்சள் கரு உருவாதல்
கோழி முட்டையின் மஞ்சள் கருவானது உண்மையில் கோழிகளின் இனப்பெருக்க அணு அல்ல. ஆனால் கருவிற்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய ஒரு பகுதியாகும். பெட்டைக் கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றின் கரு முட்டைப் பையும், கருக் குழாயும் பல்வேறு விதமான வளர்ச்சியினை அடையும். முதல் முட்டை இடுவதற்கு 11 நாளுக்கு முன்னால் கோழிகளின் உடலில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியிலிருந்து எப் எஸ் எச் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோனின் விளைவாக கருமுட்டைப் பையில் கருமுட்டைகளில் வளர்ச்சி ஏற்பட்டு அவை அளவில் அதிகரிக்கும். மேலும் செயல்படத் தொடங்கிய கருமுட்டைப் பையும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இரத்தத்திலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோழிகளின் எலும்பு மஜ்ஜையில் புரத உற்பத்தி, கல்லீரலில் கொழுப்புகள் உற்பத்தி, கருமுட்டைக் குழாயின் அளவு அதிகரித்து அதில் அல்புமின் புரதங்களின் உற்பத்தி, கோழி முட்டையின் ஓட்டின் உட்பகுதி சவ்வுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யத்தூண்டும். கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிய ஆரம்பிக்கும். ஒரு மஞ்சள் கரு முதிர்ச்சியடைய 10 நாட்களாகும்.
கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிவது மிக மெதுவாக இருக்கும். மேலும் அதன் நிறம் வெளிறியதாகவும் காணப்படும். முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள நிறமி ஸான்தோஃபில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலிருந்து பெறப்படுகிறது. முதலில் இந்த நிறமி தீவனத்திலிருந்து இரத்தத்திற்குச் சென்று பிறகு மஞ்சள் கருவிற்கு செல்லுகிறது. அதிக அளவிலான கரோட்டினாய்டு நிறமிகள் மஞ்சள் கருவின் மத்தியிலிருந்து அதன் வெளிப்பகுதியிலிருந்து படிய ஆரம்பிக்கிறது. பிறகு முழு மஞ்சள் கருவும் உருவாகி முட்டையானது கருமுட்டைப் பையின் கடைசிப் பகுதியில் சென்று சேர்கிறது. சலேசா புரதம் அவற்றின் எதிர்ப்புறத்தில் முறுக்கி முட்டை இட்டவுடன் மஞ்சள் கருவினை முட்டையின் மத்தியில் வைக்கிறது.

கோழி முட்டையின் உட்சவ்வு உருவாதல்

கரு முட்டைக் குழாயின் இஸ்துமஸ் பகுதியில் முட்டையின் உட்சவ்வுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த சவ்வுகள் நிறைய பின்னப்பட்ட நார்களால் ஆனவை. இவை தண்ணீர் மற்றும் காற்று உட்புக அனுமதிக்கும். மொத்தத்தில் முட்டையின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உருவாகும். ஒன்று உட்சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வு. முதலில் இந்த இரண்டு சவ்வுகளும் நன்றாக இணையாமல் இருக்கும். பிறகு முட்டையில் தண்ணீர் மற்றும் உப்புகளும் சேர்க்கப்பட்டு முட்டையின் முழு உருவம் உருவாகிறது. பிறகு முட்டை கர்ப்பப்பையினை சேர்ந்தடைகிறது. வெளிப்புற சவ்வு உட் புற சவ்வினை விட மூன்று மடங்கு தடிமன் அதிகமானது. வெளிப்புற சவ்வு 0.05மிமீ தடிமனும், உட்புற சவ்வு 0.015 மிமி தடிமனும் ஆனது. இந்த இரு சவ்வுகளும் ஒன்றாக ஒட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் முட்டையில் காற்றுப் பை பகுதியில் மட்டும் இவை இரண்டும் பிரிக்கப்பட்டிருக்கும். கோழிகள் முட்டையினை இடும் போது அதிலுள்ள காற்றுப்பைகள் சிறிதாக இருக்கும், பிறகு நாளாக நாளாக காற்றுப்பையின் அளவு அதிகரிக்கும்.

முட்டை ஓடு உருவாதல்

கோழியின் கர்ப்பப்பை அல்லது முட்டை ஓடு சுரக்கும் பகுதியில் முட்டை நீண்ட நேரம் இருக்கும். அங்கு முட்டை ஓடு உருவாகும். முட்டை ஓடு உருவாவதற்கு 19 முதல் 20 மணி நேரம் ஆகும். முட்டை ஓடானது கால்சியம் கார்பனேட், புரதம், மியூக்க பாலி சாக்கரைட் கலந்த கலவையால் ஆனது. முட்டை ஓட்டின் உட்சவ்வு முட்டை ஓட்டின் உட்பகுதியுடன் ஒட்டியிருக்கும். முட்டை ஓடானது, முட்டையின் உட்சவ்வுடன் பேசல் கேப் எனும் பகுதியால் இணைக்கப்பட்டிருக்கும். பேசல் கேப் பகுதி முட்டை ஓட்டின் உட்புறப் பகுதியாகும். முட்டை ஓட்டின் பெரும்பாலான பகுதி பேலிசேட் அல்லது காலம் எனும் மிகச்சிறிய ஓட்டைகள் நிறைந்த அமைப்பால் ஆனது. முட்டை ஓட்டின் கடைசிப் பகுதி கியூட்டிகிள் எனப்படும். இது முட்டையினை சுற்றி இருக்கும் ஒரு கரிமப்பொருளாகும். கியூட்டிக்கிள் பகுதி முட்டை ஓட்டில் இருக்கும் மிகச்சிறிய துளைகளை அடைத்து விடுவதால் முட்டையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்கள் முட்டையினுள் உட்செல்வதும் தடுக்கப்படுகிறது.

முட்டை இடுதல்

கரு முட்டைக் குழாயின் சிறிய பகுதியில் முட்டை உருவாகி பிறகு அக் குழாயின் கடைசிப் பகுதிக்கு நகர்கிறது. கோழிகள் பயப்படாமல் இருந்தால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதிக்கு இணையாக சுழன்று சென்று கரு முட்டைக் குழாயின் பெரிய வெளிப்பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் முட்டை இவ்வாறு சுழன்று செல்வது பாதிக்கப்பட்டால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதி வழியாக உடனடியாக வெளியேற்றப்படுகிறன்றன.

முட்டையின் வடிவம்
முட்டையில் மொத்தம் நான்கு பாகங்கள் உள்ளன. அவையாவன, 1. மஞ்சள் கரு 2. ஆல்புமின் (3)முட்டை ஓட்டு சவ்வு (4) முட்டை ஓடு

1)முட்டை மஞ்சள்:
முட்டையின் மஞ்சள் கருவானது சலேசா மூலம் முட்டையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சலேசா, அடர்த்தியான அல்புமின் புரதத்துடன் ஒரு முனையில் இணைக்கப்பட்டு மறு முனையில் முட்டை மஞ்சள் கருவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முட்டை மஞ்சள் கருவைச் சுற்றி ஒரு நிறமற்ற வைட்டலின் சவ்வு உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் லேட்டிபெரா எனும் அமைப்பு உள்ளது. இது முட்டையின் மையப்பகுதியில் உள்ள ஒரு உருண்டை வடிவ வெளிறிய நிறமுடைய திரவமாகும். முட்டையினை வேக வைக்கும்போது இந்த திரவம் கடினமாவதில்லை. முட்டையின் எடையில் 30-33% மஞ்சள் கரு உள்ளது. முட்டையின் மஞ்சள் கரு உருவாகும்போது மஞ்சள் கரு வட்ட வடிவ வளையங்களாக கருவினைச் சுற்றி படிகிறது.
முட்டையின் மஞ்சள் கருவின் மையத்திலுள்ள பகுதி முட்டையின் இனப்பெருக்கப்பகுதியாகும். கருமுட்டை விந்துவால் கருவுற்றிருந்தால் அதற்கு பிளாஸ்டோடெர்ம் என்று பெயர், கருவுறாவிட்டால் அதற்கு பிளாஸ்டோ டிஸ்க் என்று பெயர்.

2) அல்புமின் :
அல்புமின் அல்லது முட்டை வெள்ளைக்கரு மஞ்சள் கருவினைச் சுற்றியிருக்கிறது. அல்புமினில் நான்கு அடுக்குகள் உள்ளன.

உட்பகுதி அல்லது சலாசிபெரஸ் அடுக்கு
ரேன்ஸ்
முட்டையின் மஞ்சள் கருவின் மத்தியிலுள்ள கருவுற்ற கருமுட்டை அல்லது பிளாஸ்டோடெர்மை ஆல்புமின் பாதுகாக்கிறது. பிளாஸ்டோடெர்ம் முட்டை ஓட்டிற்கு அருகில் போய் அடிபடுவதை அல்புமின் தடுக்கிறது. மேலும் பாக்டீரியாக்கள் மஞ்சள் கருவிலோ அல்லது ஜெர்ம் செல்லையோ அணுகுவதையும் அல்புமின் தடுக்கிறது.

3) முட்டை ஓட்டுச் சவ்வு:
முட்டை ஓட்டின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உள்ளன. ஒன்று உட் சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வாகும். வெளிச்சவ்வு முட்டை ஓட்டுடனும், உட்சவ்வு அல்புமினுடனும் இணைந்து முட்டையின் உட்பகுதியினைச் சுற்றி உள்ளது. முட்டையின் அங்கங்களிலிருந்து வாயுக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முட்டை ஓட்டுச் சவ்வு துணை புரிகிறது.

4) முட்டை ஓடு :
முட்டை ஓட்டில் பின்வரும் பகுதிகள் உள்ளன:

மேமில்லரி அடுக்கு
ஸ்பான்ஜி அல்லது கால்கேரியஸ் லேயர்
க்யூட்டிக்கிள் அல்லது புளூம்
போர் சிஸ்டம்
கோழிகளின் இனங்களைப் பொறுத்து முட்டை ஒட்டின் நிறம் பழுப்பாகவோ அல்லது, வெள்ளையாகவோ அல்லது பச்சையாகவோ இருக்கும். பழுப்பு நிறம் ஊபோர்பைரின் எனும் நிறமியாலும், பச்சை நிறம் பிலிவர்டின் எனும் நிறமியாலும், ஏற்படுகிறது. பச்சை நிற முட்டைகள் ஆரகானா இன கோழிகள் இடுகின்றன.

முட்டையிலுள்ள மாவுச்சத்துகள்
முட்டையிலுள்ள மாவுச்சத்து மிகவும் குறைவாகும். அதாவது முட்டையின் எடையில் மாவுச்சத்து வெறும் 1 சதவிகிதமாகும். இதில் 75% அல்புமினிலும், 25% மஞ்சள் கருவிலும் உள்ளது. ஆல்புமினில் உள்ள பாதி மாவுச்சத்து குளுக்கோஸாகவும், மீதம் கிளைக்கோபுரதமாகவும் உள்ளது. உலர்ந்த முட்டைப் பொருளை சேமித்து வைக்கும்போது குளுக்கோஸ் முட்டையிலுள்ள மற்ற பொருட்களுடன் வினை புரிந்து தேவையற்ற நிறங்களையும், விரும்பத்தகாத வாசனையையும் ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க முட்டையினை உலர்த்துவதற்கு முன்பு என்சைம்கள் மூலமாக குளுக்கோஸை நீக்கி விட வேண்டும்.

முட்டையிலுள்ள நிறமிகள்
முட்டையிலுள்ள நிறமிகள் முட்டையின் எல்லாப்பகுதிகளிலும் விரவியுள்ளன. முட்டை மஞ்சள் கருவில் அதிகத்தரம் வாய்ந்த நிறமிகள் உள்ளன. முட்டை மஞ்சள் கருவிலுள்ள நிறமிகள் அவை கொழுப்பில் கரைகின்ற திறனைப் பொறுத்தும், தண்ணீரில் கரைகின்ற திறனைப் பொருத்தும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. லிப்போகுரோம்கள் கரோட்டினாய்டு குழுவினைச் சேர்ந்தவை (கரோட்டின் மற்றும் ஜான்தோபில்ஸ்). முட்டையிலுள்ள அல்புமினில் ஓவோபிளேவின் எனும் நிறமி உள்ளது. ஊபோர்பைரின் அல்லது ஊசையான் போன்ற நிறமிகள் முட்டை ஓட்டின் நிறத்திற்கு காரணமாக இருக்கின்றன.

Ceylon Farms Private Limited.
077 878 5 878
071 355 8888

12/05/2021
நாட்டுக்கோழிக்கான இயற்கை மருந்து.*******************************************குறைந்த செலவில் நிறைந்த லாபம் ஈட்டும் தொழிலி...
06/01/2021

நாட்டுக்கோழிக்கான இயற்கை மருந்து.
*******************************************

குறைந்த செலவில் நிறைந்த லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்றாகத் திகழ்வது நாட்டுக்கோழி வளர்ப்பு. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தொழிலில் உள்ள சவாலான பணி எதுவென்றால்.

கோழிக்குஞ்சுகளைப் பராமரிப்பதுதான் கடினம். அவ்வாறு பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.
கோழிக்குஞ்சுகளுக்கு மஞ்சள் சீரக மருந்து கொடுக்க வேண்டும்.

1- ( 7ம் -10ம் ) நாட்களான கோழிக்குஞ்சிற்கு மஞ்சல், சீரக மருந்து தயாரிக்கும் முறை.

சீரகம் - 10g, மஞ்சள் - 5g, தண்ணீர் 1½ லிட்டர் கொதிக்க வைத்து 1 லிட்டராக்க வேண்டும்.

2- ( 14ம் - 20ம் ) நாட்களான கோழிக்குஞ்சிற்கு
வேப்பிலை, முருங்கைலை அறைத்து ஆகியவற்றையும் கொடுக்கலாம். 1 மாதத்திற்கு பிறகு வாரம் 1 முறை கொடுக்கவும்.

3- ( குடற்புழு நீக்கம் Deworming )
( 45ம் - 90ம் ) நாட்களான கோழிகுஞ்சிற்கு
2 லிட்டர் தண்ணீரில் 250g கற்றாழையைக் கலந்து கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் மாதம் இரு முறை இதனைக் கடைப்பிடித்தால் எளிதில் நோய்த்தன்மை, குடற்புழு நீக்கம் செய்ய முடியும்.

 #வேளாண்_சார்ந்த_தொழில்கள்1. கால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு செய்வது எப்படி? Click link:http://gic.gov.l...
19/12/2020

#வேளாண்_சார்ந்த_தொழில்கள்

1. கால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு செய்வது எப்படி?
Click link:
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1783&catid=47&task=info

2.கோழி இனவிருத்திப் பண்ணைகளின் பதிவு
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1777&catid=47&task=info

3. கோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1778&catid=47&task=info

4. கால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1779&catid=47&task=info

5. கால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1781&catid=47&task=info

6. செல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1782&catid=47&task=info

7. வீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் இறக்குமதிக்கான அனுமதி
Click link :
http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1768&catid=47&task=info

Department of Animal Production and Health
P.O.Box 13,
Peradeniya
Sri Lanka

Dr.S.S.P. Silva
தொலைபேசி:+94 81 2388195
தொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619
மின்னஞ்சல்:[email protected] , [email protected]
இணையத்தளம்: www.daph.gov.lk

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!நாட்டுக் கோழி வளர்பவர்கள் கவனத்திற்கு வெயில் அதிகமாக இருந்து லேசான மழை இருந்தால...
24/11/2020

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!

நாட்டுக் கோழி வளர்பவர்கள் கவனத்திற்கு வெயில் அதிகமாக இருந்து லேசான மழை இருந்தால் கோழிகளுக்கு வெள்ள கழிச்சல் ஏற்பட்டு உடனே இறந்துவிடும். வெள்ளக்கழிச்சலிலிருந்து கோழிகளை காப்பாற்ற

கீழாநெல்லி - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 2 பல்,
மஞ்சள் - 5 கிராம்,
சீரகம் - 20 கிராம்
ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... அரிசிக் குருணை கலந்து தொடர்ந்து,
3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்... வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.

அல்லது

துளசி - 20 இலை,
தும்பை - 10 இலை,
கற்பூரவள்ளி - 1 இலை,
தூதுவளை - 1 இலை,
சீரகம் - 5 கிராம்,
மஞ்சள் - 5 கிராம்,
மிளகு - 5 கிராம்,
பூண்டு - 5 பல்

ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால்... நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.

நாட்டுக்கோழி அதிக குஞ்சுனை பெறும் முறைகள்.  ******************************************** நாம் வளர்க்கும் கோழிகளில். 5 பெ...
21/11/2020

நாட்டுக்கோழி அதிக குஞ்சுனை பெறும் முறைகள். *******************************
************

* நாம் வளர்க்கும் கோழிகளில். 5 பெட்டைக கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

* மாறாக அதிக போட்டு கோழிகளுடன் ஒரு சேவல் என்ற விகிதத்தில் இருந்தால்.
குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.
அதோடு அதிக அளவில் சேவல் இருந்தாலும்
அங்குள்ள போட்டு கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் வீதம் குறைவாகவே இருக்கும்.

* முட்டைகளை சேகரிக்கும் காலம்
***********************************
* முட்டைகளை அடை வைக்கும்போது.
கோடை காலங்களில் இடும் முட்டைகளில். நான்கு நாட்கள் வரையிலான முட்டைகளையும். மழை காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் அடை வைக்க பயன்படுத்தலாம்.

* இதற்கு மாறாக 7 நாட்களுக்கு முன் இட்ட முட்டைகளை இன்று இட்ட முட்டைகளுடன் இணைத்து அடை வைத்தால். குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவராது.

* இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் உள்ள முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சு பொரிக்கும் வீதத்தினை அதிகப்படுத்த வேண்டும்.

* அடைகாக்க கோழியை வைக்கும் நேரம்
*******************************************
* பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டுவது வலக்கம்.

* எனவே ஒரு அடைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து. அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை. அதிகநேரம் அடிக்கடி அடை காப்பதை விட்டு வெளியே எழுந்திருக்காமல். முட்டையோடு உடன் இருப்பது அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும்.

* அடைக்கோழிக்கு அடை வைக்க துவங்கும்போது கட்டாயம் மாலை வேளையில் முட்டைகளை அடை வைக்க வேண்டும்

* அதோடு அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது.

* மாலை வேளையில் ஒரு கோழியை அடைகாக்க வைக்கும்போது. இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல். 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு. தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

* எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.
மாறாக முதன்முதலில் அடை வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால். அடைக்கோழிக்கு தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும்.

* இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால். குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு முட்டையினுள் குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.

* எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சுகளை பெறும் போது. அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது. கிடைக்கும் குஞ்சுகளை விட பகலில் அடை வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகள் குறைவாகவே இருக்கும்.

* எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.

*அடைக்கோழியின் உடல்நலன்
*********************************
* கோழிப்பேண். தெள்ளு. பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2ml மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து. கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் மூழ்க செய்து. வெயிலில் விடவேண்டும்.

* இவ்வாறு செய்வதால் உடலில் பேண். தெள்ளு. பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு தன்மை. மற்றும் ஏனைய தொந்தரவுகள் குறைந்து நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.
சாம்பல் தொட்டி வைத்தாலும் அதில் மண் குளியல் மூலமும் பேன் பதிப்பினை குறைக்கலாம் .

* கருக்கூடிய முட்டையைக் கண்டறிதல் ****************************************
* நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன. என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.

* இதற்கு தேவையானவை ஒரு டோர்ச்லைட் அல்லது மின்சார பல்ப் ஒரு அட்டை . கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் சென்று அட்டையில் முட்டை போகும். அளவிற்கு இறுக்கமாக ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூர்முனை வடிவமான பகுதி கீழாக வரும்படி வைத்து. கீழ்புறத்தில் இருந்து வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும் இரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும்.

* இவ்வாறு பரிசோதனை செய்யும்போது முட்டையினை குலுக்கக்கூடாது
கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ இரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.

* கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மேற்கூறிய முறைகளை கவனத்தில் கொண்டு அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெறலாம்.

*குறிப்பு

* அடைக்கோழிகள் இருந்து பெறப்படும் குஞ்சுகளுக்கு எப்போதும் சந்தை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

17/11/2020
கோழிகளுக்கு கண்ணில் ஏற்படும் சளி நோய்க்கான கால்நடை வைத்திய அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட சொட்டு மருந்து. Bueflox எனும் ...
17/11/2020

கோழிகளுக்கு கண்ணில் ஏற்படும் சளி நோய்க்கான கால்நடை வைத்திய அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட சொட்டு மருந்து.

Bueflox எனும் மருந்தை 08 மணிநேரத்திற்கு ஒரு முறை நோயுற்ற கோழிகளுக்கு கண்ணில் ஒரு துளி விட்டு 05 நாட்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டுமாம்.

அத்துடன் மாத்திரையும் தந்துள்ளனர்.
500ml தண்ணீரில் ஒரு மாத்திரையை கலந்து அனைத்து கோழிகளும் பருகும் பாத்திரத்தில் தொடர்ந்து 07 நாட்களுக்கு குடிக்க வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.

விவசாய நண்பர்களுக்கு இது பயனளிக்கும்.

Copy and Past

தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும்.பூச்சி மற்றும் நோய் தாக்கம்1. எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த ...
14/11/2020

தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும்.

பூச்சி மற்றும் நோய் தாக்கம்

1. எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து ஒரு பகுதியை உச்சித்தண்டின் கீழ் சுற்றியும் மறுபகுதியை எதிர்திசையில் சுற்றவும்.
நடுத்தண்டில் 2-3 அடிக்கு, சீமைக் கருவேல் அல்லது முற்கம்பிகள் சுற்றி விடவும். இவ்வாறு அணில் மற்றும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

2. பூக்கள் மற்றும் குரும்பை உதிர்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
பூ உதிர்வைத் தடுக்க உப்பை (2 கிலோ/மரம்) பூ நுனியில் தடவவும். மேலும் வேர் பகுதிகளுக்கு உப்பு போட்டு நீர் பாய்ச்சவும்.
வேப்ப எண்ணெய் தெளித்து பூ உதிர்வை குறைக்கலாம்.
சாம்பல் இடவும்
பூப்பதற்கு முன் பாத்தியில் கொழிஞ்சி மற்றும் எருக்கு இடவும்.

3. தென்னையில் காண்டாமிருக வண்டு பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
தோப்பில், மண் பானைகளில் தண்ணீரில் ஆமணக்கு புண்ணாக்கு போட்டு வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு அதன் மணத்தால் வண்டு ஈர்க்கப்பட்டு சாகிறது.
வளரும் குருத்து மற்றும் பக்கத்துப் பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிக்கவும்.

4. தென்னையில் சிவப்பு கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
கூண் வண்டு துளைத்த ஒட்டையை சுத்தம் செய்து, உப்பு போட்டு பஞ்சு கொண்டு அடைத்து வைக்கவும்.

5. தென்னை மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து எவ்வாறு கட்டுப்படுத்துவது?
தென்னை மரத் தண்டின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவும்
500 கிராம் உப்பை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க தண்டின் மேல் ஊற்றவும்
பண்ணைப் பறவைகள் வளர்த்து, கரையானை சாப்பிட விடவும்

6. தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
கொழிஞ்சி மற்றும் தக்கைப் பூண்டு வளர்த்து, உழுது விடவும்
வேப்பம் புண்ணாக்கு இட்டு தொழு உரம் இடவும்

7. தென்னையில் சாறு ஒழுகல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஒழுகும் இடத்தில் தண்டை சிறிதளவு வெட்டி விட்டு, சுத்தம் செய்து சுண்ணாம்பு தண்ணீர் ஊற்றவும்.

8. தேங்காய் எண்ணெயை தூசி இல்லாமல் சுத்தமாக, என்ன செய்ய வேண்டும்?
தேங்காய் எண்ணெயில் சிறிது சக்கரை இட்டு சுத்தப்படுத்தவும்.

9. தென்னையை தாக்கக் கூடிய பூச்சிகள் யாவை?
காண்டாமிருக வண்டு – ஒரிக்டெஸ் ரைனோசெரஸ்
சிலந்திப் பூச்சி – ஏசிரியா குயுரெரோனிஸ் (ஈரியோபைடு மைட்)
சிவப்பு கூண் வண்டு – ரின்கோபோரஸ் பெருஜினியஸ்
கருந்தலைப் புழு – ஒபிசினியா அரினோசெல்லா

10. தென்னை இலைகளில் எதனால் முக்கோண வெட்டு ஏற்படுகிறது?
காண்டாமிருக வண்டு முக்கோண வெட்டுகளை உண்டாக்கிறது. அவை இலைக் குருத்துகள் மற்றும் தென்னம்பாளைகளை சேதப்படுத்துகின்றன. மத்திய தென்னங் குருத்து வெட்டுப்பட்டு, ஒட்டைகளுடன், மென்ற நார் குருத்தின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

11. தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு தாக்கத்தை எவ்வாறு கண்டறிவது ?
வண்டு, விரியாத குருத்து மற்றும் பாளைகளை சேதப்படுத்துவதால், 10-15% மகசூல் குறையும்.
சேதப்பட்ட குருத்து விரியும் போது, முக்கோண வெட்டு தெரியும்.
மத்திய குருத்து வெட்டப்பட்டு/சுருண்டு இருக்கும்
நன்றாக விரிந்த இலைகளில் சாய் சதுர வெட்டுகள் தென்படும்
மத்திய குருத்தின் அடிப்பகுதியில், வண்டு, மென்று தின்ற நார் ஒட்டியிருக்கும்.

12. காண்டாமிருக வண்டின் வாழ்க்கை சுழற்சி எத்தனை நாள்? எவ்வாறு காண்டாமிருக வண்டினை அறியலாம்?
முட்டை : குப்பை குழி அல்லது இலைகள் மக்கும் இடங்களில் 5-15 செ.மீ ஆழத்தில், நீள் வட்ட அழுக்கு வெள்ளை நிற முட்டைகள் காணப்படும். 8-18 வரை முட்டை பருவம், ஒரு பெண் வண்டு 140-150 முட்டைகள் இடும்.
கூண் வண்டு புழு பருவம் : புழுக்கள் குண்டாக, மந்தமாக வெள்ளை நிறத்தில் ‘சி’ வடிவத்திலும், காப்பி நிற தலையுடன் 5-30 செ.மீ ஆழத்தில் இருக்கும்.
கூட்டுப்புழுக்கள்: 0.3-1 மீ ஆழத்தில் மண் கூடுகளில் கூட்டுப்புழுக்கள் இருக்கும்
முதிர் வண்டு: காப்பிக் கருப்பு நிறம்/கருப்பு நிறத்தில் குண்டாக, தலையின் முன்னால் கொம்புடன் முதிர் வண்டு இருக்கும். ஆண் வண்டுகளுக்கு நீளமான, பெண் வண்டுக்கு குட்டையான கொம்பும் இருக்கும்.

13. தென்னையில் காண்டாமிருக வண்டு பிரச்சனைக்கு தீர்வு என்ன?
பழைய மறித்த தென்னை மரங்களை பிடுங்கி எரித்துவிட வேண்டும். வண்டு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், குப்பைக் குழிகளில் உள்ள புழுக்களைப் கண்டு எடுத்து, அழிக்க வேண்டும். 0.01 % கார்பரில் மருந்தை வாரம் தோறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தெளிக்கவும். 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கரைத்து, மண் பாண்டங்களில் ஊற்றி வைக்கவும். முதிர் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க இது உதவும்.

14. காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த ஏதாவது உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகள் உள்ளதா? இருப்பின் அவை யாவை?
5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கலந்து, மண் பானைகளில் ஊற்றி, காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கவும்.
பேக்குளோவைரஸ் ஒரைசிடிஸ் ஏற்றப்பட்ட வண்டுகளை (15 எண்ணிக்கை/எக்டர்) தென்னந்தோப்பில் விடுவதன் மூலம், இலை மற்றும் உச்சி தண்டு சேதத்தை கட்டுப்படுத்தலாம்.
வேப்பங்கொட்டை பொடி + மணல் கலவையை (1 : 2) 150 கிராம்/மரம் தண்டு உச்சியின் மேற்பகுதியில், உட்பகுதியின் உள்ள மூன்று இலைகளின் அடிப்புறத்தில் இட வேண்டும்.

15. காண்டாமிருகவண்டு கட்டுப்பாடிற்கு என்ன பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தலாம்?
வேப்பம் புண்ணாக்கு பொடி+மணல் (1:2) @ 150 கிராம்/மரம் அல்லது வேப்பங்கொட்டை பொடி+மணல் (1:2) 150 கிராம்/மரம் கலவையின் உட்பகுதியின் மூன்று இலைகளின் அடிப்பகுதியில் இட வேண்டும்.
5 கிராம் 10 G போரேட் மருந்தை, துவாரங்கள் உடைய பாக்கெட்டுகளில் தண்டு உச்சியின் இலைகளில், உட்புறமாக உள்ள இரண்டு இலைகளில் அடித்தண்டில் படுமாறு போட்டு வைக்கவும். 6 மாத இடைவெளியில், வருடத்திற்கு 2 முறை மருந்து போட வேண்டும்
25 கிராம் செவிடால் + 200 கிராம் மணல் கலவையை ஏப்ரல்-மே, செப்டம்பர்- அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஒரு வருடத்திற்கு, 3 முறை இட வேண்டும். 10.5 கிராம் அந்து உருண்டகளை (3 உருண்டகள்) மணலால் மூடி 45 நாட்களுக்கு ஒரு முறை இட வேண்டும். – கேரளா வேளாண்மை பல்கலைக் கழகம்.

16. காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த பின்பற்றப்படும் கைவினை முறைகள் யாவை?
பிளவு பட்ட தென்னந் தண்டுகள் மற்றும் இலைகளை புதிய கள் பானம் செலுத்தியும், கள் பானைகளை தோப்பில் வைத்து வண்டுகளை ஈர்த்து அழிக்கலாம்.
ஒவ்வொரு அறுவடையின் போதும், உச்சித்தண்டை கண்காணித்து, முதிர் வண்டுகளை எடுத்து, அழித்து விட வேண்டும்.
கோடை காலத்தில் முதல் மழைக்கு பின்பும், பருவ மழைக்கு பின்பும், விளக்குப் பொறி வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
ரைனோ லூர் இனக் கவர்ச்சிப் பொறியை ஒரு எக்டருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் பொருத்தி வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

17. கொப்பரை மகசூல் அதிகமாக என்ன செய்ய வேண்டும்? கொப்பரை அளவு எதனால் குறைகிறது?
ஈரியோபைடு சிலந்தி பூச்சி தாக்கத்தினால், கொப்பரை அளவு குறைகிறது.
இதனைக் கட்டுப்படுத்த கொப்பரை மகசூலை அதிகரிக்கலாம்.

18. தென்னையில், 2-3 மாத குரும்பைகளில் எதனால் முக்கோண மஞ்சள் புள்ளிகளும், முதிர்ந்த குரும்பைகளில் கோந்து வெளியேற்றமும் காணப்படுகிறது?
ஈரியோபைடு சிலந்தி பூச்சி இந்த அறிகுறிகளை தோற்றுவிக்கிறது
முதல் பருவத்தில் அல்லி வட்ட இதழ்களுக்கு அருகில் முக்கோண மஞ்சள் புள்ளிகள்
காய்ந்த திசுக்கள்
காய்களில் காப்பி நிற சுவடுகள், குறுக்கு பிளவுகள் மற்றும் தென்னை மட்டையில் பிளவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோந்து வடிதல்
பிளவுகளுடன், கூடிய கடினமான மட்டைகள் உடைய உருவமாற்றமடைந்த காய்கள்
2-3 மாத குரும்பைகளில், முக்கோண மஞ்சள் புள்ளிகள் தென்படும். பின்னர் காப்பி நிறத்தில் மாறும். தாக்கம் தீவிரமானால் குரும்பைகள் உதிரும்.

19. தேங்காய் மட்டையின் தரத்தை சிலந்தி பூச்சி தாக்கம் எவ்வாறு
பாதிக்கிறது?
குரும்பைகளின் ஓடுகளில் காப்பி நிற சுவடுகளை ஏற்படுத்துகிறது. குரும்பைகள் வளர வளர, காப்பி நிற சுவடுகள், காய்ந்த கரும்புள்ளிகளாக மாறி குறுக்கு பிளவு உண்டாகிறது. சீரான வளர்ச்சி இல்லாததால் குன்றிய சிறிய காய்கள் கிடைக்கின்றன. கொப்பரை மகசூல் குறைகிறது. தீவிரமான தாக்கம் இருக்கும் போது, தேங்காய் தரம் குறைவதோடு, அவற்றை உறித்து எடுக்கும் செலவும் அதிகமாகிறது.

20. எவ்வாறு சிலந்தி பூச்சியை கண்டறியலாம்?
இளங்குஞ்சுகளும் முதிர் பூச்சிகளும், பழுப்பு நிறத்தில் நீண்ட உடலுடன் புழு போன்று காணப்படும்.

21. தென்னையில் நிரந்தரமாக சிலந்தி பூச்சியைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
2% வேப்பெண்ணெய் + பூண்டு கரைசல் அல்லது நீமசால் T/S 1% மருந்தை @ 4 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 0.4% வெட்டபிள் சல்பர் பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பு – 10 லிட்டர் 2% வேப்பெண்ணெய் + பூண்டு கரைசல் (300 மில்லி தண்ணீரில் சார் எடுத்தது) தயாரிக்க, 50 கிராம் சோப்புக் கட்டியை (500 மில்லி தண்ணீர் கரைத்த) 200 மில்லி வேப்பெண்ணெய்யில் சேர்க்கவும்.
50 கிலோ தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு/மரம்/வருடம் இடவும்.
தென்னந்தோப்பில், பாத்திகளில், சணப்பை, காராமணி மற்றும் கலப்பகோனியம் போன்ற பசுந்தாள் உரங்களை விதைத்து மண்ணில் உழுதுவிடும் போது, கோடை காலத்தில் நிலப்போர்வையாக இருப்பதோடு, மெதுவாக மக்க மக்க, ஊட்டச்சத்துக்கள் வெளிவரும்.

22. சிலந்தி பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு, மருந்து தெளிக்கும்போது பின்பற்ற வேண்டிய முறைகள் யாவை?
ராக்கர் தெளிப்பான் பயன்படுத்தும்போது ஒரு மரத்திற்கு 1-1.5 லிட்டர் தெளிப்புக் கரைசல் தேவை. கைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது, 500-700 மில்லி தெளிப்புக் கரைசல் தேவை.
மகரந்த சேர்க்கை நடைபெறாத பாளைகளை விட்டுவிட்டு, 2-7 வது குலைகள் வரை தெளிக்கவும். 3, 4, 5, வது குலைகள் நிறைய தெளிக்கவும். ஏனெனில் அவற்றில் அதிகமான பூச்சித்தாக்கம் இருக்கும்.
வருடத்திற்கு மூன்று முறை தெளிக்கவும். டிசம்பர்-பிப்ரவரி, ஏப்ரல்-ஜுன், மற்றும் செப்டம்பர்-அக்டோபரில் தெளிக்கவும். மருந்து தெளிக்கும்போது அவை சரியாக குரும்பையின் அல்லி வட்டங்களில் நன்றாக படும்படி தெளிக்கவும். சராசரியாக ஒரு மரத்திற்கு 1-1.5 லிட்டர் தெளிப்பு கரைசல் தேவை. பூச்சிக்கொல்லி தெளிக்கும் முன் காய்களை பறித்து விடவும்.

23. சிலந்தி பூச்சி தாக்கத்தை மேலாண்மை செய்ய என்ன உர நிர்வாகம் பரிந்துரைக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில், சிலந்திப்பூச்சி கட்டுப்பாட்டு நிர்வாக முறைகள் பின்பற்றப்படுகிறது
தொழு உரம் மற்றும் உர நிர்வாகம் (மண்ணில் இடுதல்/மரம்/வருடம்)
யூரியா 1.3 கிலோ
சூப்பர் பாஸ்பேட் 2.0 கிலோ
பொட்டாஷ் 3.5 கிலோ
சிலந்திப் பூச்சிக்கான நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்க அதிகமான அளவு பரிந்துரைக்கப்படுகிறது.
வேப்பம் புண்ணாக்கு @ 5 கிலோ
தொழு உரம் (மக்கிய உரம்) @ 50 கிலோ
நுண்ணுாட்டங்கள் (மண்ணில் இடுதல்/மரம்/வருடம்)
போராக்ஸ் 50 கிராம்
ஜிப்சம் 1.0 கிலோ
மெக்னீசியம் சல்பேட் 500 கிராம்
சணப்பை பசுந்தாள் பயிரை வருடத்திற்கு இருமுறை ஊடுபயிர் செய்யவும். (விதையளவு 30 கிலோ/எக்டர்)

24. தென்னை மரத்தண்டில் துளைகளும், காப்பி நிற கோந்து வடிதலும் எதனால் ஏற்டுகிறது?
· சிவப்புக் கூண் வண்டு, தண்டில் துளைகள் மற்றும் காப்பி நிற கோந்து வடிதலை உண்டாக்குகிறது. இதனால் உள் இலைகள் மஞ்சள் அடைந்து, நாளடைவில், மத்திய குருத்து வாடல் ஏற்படுகிறது.
ஏனைய அறிகுறிகள்
மென்ற நார்பகுதிகள் வெளியே வருவதால்
இலை அடிப்பகுதி பிளவு ஏற்படுகிறது
மத்திய குருத்து வாடல்

25. எவ்வாறு சிவப்பு கூண் வண்டை தெரியலாம்?
இளமஞ்சள் நிறத்தில் கால்கள் இல்லாத பூச்சிகள், சிவப்பு, காப்பி நிற கூண் வண்டுகள் தெரியும். ஆண் வண்டுகள் நீளமான முகத்துடன் காணப்படும்.

26. சிவப்பு கூண் வண்டு தென்படும் போது, என்னென்ன உடனடி கட்டுபாடு முறைகள் மேற்கொள்ள வேண்டும்?
தண்டு காயம் ஏற்படுவதை தவிர்க்கவும். இலைகளை வெட்டும்போது, 120 செ.மீ உயரம் விட்டு வெட்டினால் புழுக்கள் வெட்டுப்பகுதிகளில் உட்புகுவதை தவிர்க்க முடியும்.
தண்டின் உச்சியில் உள்ள முதல் மூன்று இலைகளுக்கு அடியில் மணல்: வேப்பம்புண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டை பொடி (2:1) கலவை போடவும். அல்லது லிண்டேன் 1.3 மருந்தை (1:1 கன அளவு) மூன்று மாதத்திறகு ஒருமுறை இட்டு காண்டாமிருக வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்தி, அவ்வண்டு பாதித்த பகுதிகளில் சிவப்பு கூண் வண்டு முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பொறிகளை பயன்படுத்தவும்.

27. தென்னையில் எவ்வாறு சிவப்புக் கூண் வண்டுத் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்?
எல்லா ஓட்டைகளையும் அடைத்து, தாக்கம் அடைந்த நீளத்தைவிட துாரமாகத் துளைத்து, பைரோகோன் E அல்லது கார்பரில் 1% அல்லது 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை உட்செலுத்தவும். தண்டின் மேல் பகுதியில் மட்டும் ஒரு ஓட்டையை விட்டுவிட்டு பிற துளைகளை அடைத்து விடவும். 1% கார்பரில் (20 கிராம்/லிட்டர் அல்லது 0.2% டிரைகுளோர்போன் அல்லது 0.1% எண்டோசல்பான் கரைசல் @ 1 லிட்டர் உட்செலுத்தி மூடவும். தேவையெனில் ஒரு வாரம் கழித்து மறுபடியும் மருந்து செலுத்தவும்.
1% டி.டி.வி.பி அல்லது அலுமினியம் பாஸ்பைடு ஒன்று அல்லது இரண்டு உபயோகித்து கூண் வண்டைக் கட்டுப்படுத்தவும்.

28. சிவப்பு கூண் வண்டிற்கு என்னென்ன பொறிகள் உள்ளன?
தென்னை மரப் பொறிகள்
இனக்கவர்ச்சிப் பொறிகள் (2 எக்டருக்கு ஒன்று)

29. சிவப்பு கூண் வண்டு தாக்கத்தைக் கட்டுப்படுத்த தென்னை மரப்பொறிகள் மற்றும் இனக் கவாச்சி பொறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
தென்னை மரப் பொறிகள்:

மண் பானைகளில் கரும்பு மொலாசஸ் 2.5 கிலோ அல்லது கள் 2.5 லிட்டர் (அன்னாசி (அ) கரும்பு மொலாசஸ் + ஈஸ்ட்) + அசிடிக் அமிலம் 5 மில்லி + 5 கிராம் ஈஸ்ட் வைக்கவும். 30 குறுக்காக வெட்டிய தென்னந்தண்டு அல்லது இலைக்காம்புகளை வைத்து அதிகமான சிவப்புக் கூண் வண்டிகளை பொறியில் சிக்க வைக்கலாம். பொறிகளில் கூண்டு வண்டை கொல்லுவதற்காக ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை உபயோகிக்கவும்.
இனக்கவர்ச்சி பொறி @ 1/2 எக்டர்
பெரிய வாலியில் பூச்சிகள் உள்ளே, செல்லும்படியாக 3-4 ஓட்டைகள் போடவும். உள்ளே இனக்கவர்ச்சி பொறியை தொங்கவிட்டு தண்ணீர் விடவும். பூச்சித்தாக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் வாலிகளை வைக்கவும். ஒரு வாரம் கழித்து, வண்டுகளை நீக்கி, புதிய தண்ணீர் ஊற்றி கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

30. தென்னந்தண்டில் எதனால் காயங்கள் ஏற்படுகிறது? மட்டைக்காம்புகள் ஏன் சிவப்பாகிறது?
பட்டைக் கூண் வண்டு, இலைக்காம்புகளை சிவப்பாகிறது. தண்டில் காயங்கள் தென்படும், தண்டு ஒழுகல் நோய் வரும், முதிர்ந்த பூச்சிகள் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும்.

31. தென்னையில் பட்டை கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
0.2% பென்தியான (அ) 0.2% டைகுளோர்வாஸ் மருந்தை ஸ்டவ் திரியில் நனைத்து மருந்தை தண்டில் உட்செலுத்தவும். பிறகு ஓட்டையை மூடிவிட்டு, தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மறுபடியும் செய்யவும்.

32. தென்னம்பட்டையில் உள்ள சிறிய ஓட்டைகளை எவ்வாறு சரி செய்யலாம்?
மரப்பட்டை துளைப்பான் சிறிய ஓட்டைகளை ஏற்படுத்தி உள்ளே நார்க் குகைகளால் இணைக்கிறது. இதற்கு 0.2% பென்தியான் (அ) 0.2” டைகுளோரோவாஸ் மருந்தை ஸ்டவ் திரியில் நனைத்து உட்செலுத்தி கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டாடல் ஒரு மாதம் கழித்து மறுபடியும் மருந்து செலுத்தலாம்.

33. எப்பொழுது கருந்தலை கம்பளிப்புழு தென்னையை தாக்குகிறது? அதன் அறிகுறிகள் என்ன?
மழைக்கு பிறகு, நவம்பர்-மே மற்றும் ஆகஸ்ட்-நவம்பரில் பூச்சித்தாக்கம் தென்படும். எல்லா வயது தென்னை மரங்களும் பாதிக்கப்படுகிறது.
அடி இலைகளின் சிற்றிலைகளில் காய்ந்த அறிகுறிகள் தெரியும். சிற்றிலைகளின் மேல்பகுதியில், பஞ்சுக்கூடுகள் இருக்கும்.
கேரளாவில் கோடை காலத்தில் ஜனவரி-மே மாதத்தில் பூச்சித்தாக்குதல் தீவிரமாக இருக்கும்.

34. கருந்தலைக் கம்பளி புழுக்களை எவ்வாறு கண்டறியலாம்?
புழுக்கள் காப்பிப் பச்சை நிறத்தில் இருக்கும்.
பஞ்சுக் கூடுகளில் கூட்டுப்புழு இருக்கும்.
முதிர் அந்துப்பூச்சி சாம்பல் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

35. எவ்வாறு கருந்தலைக் கம்பளி புழுவை கட்டுப்படுத்தலாம்?
பூச்சித்தாக்கம் தீவிரமாக இருக்கும்போதும், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் பயனளிக்காத போதும் இலையின் அடிப்பாகத்தில் 0.2% டைகுளோர்வாஸ் (100 EC) 0.05% மாலத்தியான 1 மி.லி/லிட்டர், குயினல்பாஸ் 0.05% எண்டோசல்பான் 0.05% அல்லது பாசலோன் 0.05% மருந்தை தெளிக்கவும்.
குறிப்பு: பூச்சிக் கொல்லிகள் தெளித்த 21 ஆம் நாள் முதல் புழு மற்றும் கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளை வெளியிடவும்.
10 மில்லி 36 WSC மோனோகுரோட்டோபாஸ் மருந்து + 10 மில்லி தண்ணீர் கலந்து 7 x 10 செ.மீ பாலித்தீன் பைகளில் ஊற்றி வேர்மூலம் உட்செலுத்தவும்.

36. கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த என்னென்ன உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன?
கோனியோசஸ் நெபண்டிடிஸ், பிரேகிமேரியா நோசடோய் போன்று புழு பருவ ஒட்டுண்ணிகளை (2 மற்றும் 3 ஆம் பருவ புழுக்கள்) @ 1:8 (சார் உயிரினம்) @ 3000/எக்டர் தென்னங்குருத்துப் பகுதியில் விடவும்.
பெத்திலிட், பிரேக்கனாய்டு, இக்நிமோனிட்ஸ், போன்ற புழுப்பருவ ஒட்டுண்ணிகளையும், யூபோடிலிட் போன்ற கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணிகளையும் ஜனவரி மாதம் முதல் வெளியிட்டு கோடை காலத்தில் பூச்சிப் பெருக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

37. தென்னையில் எதனால் இலை உதிர்கிறது?

நத்தைப் புழு இலை உதிர்வை ஏற்படுத்துகிறது. மணல் கலந்த வண்டல் மண் உள்ள கேரள கர்நாடகப் பகுதிகளில் புழுக்கள் காணப்படும். வேர்களை சேதப்படுத்தும், கன்றுகளில் துளைவிட்டு அடித்தண்டு வரை செல்லும். இதற்கு, இதன் ஒரு வருட ஆயுட் காலத்தில் 8 மாதம் புழுப்பருவம். செப்டம்பர்-அக்டோபரில் அதிகமான புழுக்கள் இருக்கும். முன் பருவ மழைக்கு பின்னர் மே-ஜுன் மாதத்தில் மண்ணில் இருந்து முதல் வண்டுகள் வெளியே வரும்.

38. நத்தைப்புபுழுக்களை எவ்வாறு கண்டறியலாம்?
பச்சை மற்றும் சாம்பல் கருப்பு நிற புழுக்கள்
அடர் காப்பி நிற ஓடுகள் உடைய கூட்டுப்புழுக்கள் பச்சை சிறகுகள் அந்துப்பூச்சி அல்லது சிறிய சாம்பல் காப்பி நிற அந்துப்பூச்சி

39. எவ்வாறு நத்தைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்?
டைகுளோர்வாஸ் 76 WSC 2 மில்லி/லிட்டர்
பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ்
டிரைஅசோபாஸ் 40 EC 5 மில்லி
மிதைல் டெமட்டான் 25 EC 4 மில்லி/லிட்டர்
15 மில்லி மோனோகுரோட்டோபாஸ் + 15 மில்லி தண்ணீர் கலந்து வேர்மூலம் உட்செலுத்துதல்,

40. சிற்றிலை நுனிகள் ஏன் சுருள்கிறது?
· தென்னை தத்துப்பூச்சியினால் இலைநுனிச் சுருள் ஏற்படுகிறது.

41. தென்னை தத்துப்பூச்சி, தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர
இலைக் கம்பளிப்புழுவைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லி + தண்ணீர் 10 மில்லி கலந்து, 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை வேர்மூலம் உட்செலுத்தவும்.
விளக்குப்பொறிகள் வைத்து பூச்சிகளை பிடிக்கவும்.
டைகுளோர்வாஸ் 76 WSC மருந்தை 2 மில்லி/லிட்டர்

42. இலையின் நடு நரம்பை மட்டும் விட்டுவிட்டு இலைப்பகுதிகளை எது சாப்பிடுகிறது? அதை எவ்வாறு கண்டறிவது?
இலை தின்னும் கம்பளிப் புழுக்கள் நடுக்குச்சியை மட்டும் விட்டு, இலைகளை திண்ணும். புழுக்கள் முந்தைய பருவத்தில் காப்பி நிறத்திலும், பின்னர் பச்சை நிறத்திலும் இருக்கும். பூச்சிகள் பழுப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும்.
டைகுளோர்வாஸ் 76 WSC 2 மில்லி/லிட்டர் தெளிக்கவும்.

43. தென்னை இலையில் எதனால் சீரற்ற ஓட்டைகள் வருகின்றன?
பை புழு இலைகளில் சீரற்ற ஓட்டைகளை ஏற்படுத்துகிறது. புழுக்கள் நுாற்களால் ஆன முக்கோண உருண்டை கூடுகளில் காணப்படும்.

44. எதனால் இளவயதில் குரும்பை உதிர்வும், வேர்பாதிப்பும் ஏற்படுகிறது?
வெள்ளைப் புழுக்கள் குரும்பை உதிர்வையும், வேர் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. பிற அறிகுறிகள் என்னவெனில்
மஞ்சள் நிற இலைகள்
பூப்பு தாமதமடைதல்
மகசூல் குறைவு
போன்றவை ஆகும்.

45. தென்னை சிற்றிலைகளை வெட்டி சுருட்டுவது எது?
சுவேஸ்டஸ் கிரிமியஸ், சிற்றிலைகளில் ஒரு பக்கத்தை வெட்டி சுருட்டி கூட்டினுள் செலுத்தும்.
அதன் அடையளங்கள்
புழுக்கள்: மென்மை, பச்சை நிறத்தில் இரு முனைகளிலும் சிறுத்து, தலை மற்றும் உடலுக்கு இடையே தடுப்பு உள்ள புழுக்கள்.
பூச்சி: முன் இறகுகளில், சாக்லேட் காப்பி நிறத்தில் மஞ்சள் புள்ளிகள் இருக்கும்.

46. வெள்ளைப் புழுவை எவ்வாறு கண்டறியலாம் ?
கோடுகள் போட்ட இறகுகளுடன் காப்பி நிற வண்டுகள் தென்பட்டால், வெள்ளைப் புழுக்கள் இருக்கும் என அறியலாம்.

47. வெள்ளைப் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
வேம்பு, ஐலேந்தஸ் மற்றும் அக்கேசியா போன்ற கவர்ச்சிப் பயிர்களை நடலாம். அல்லது இலைகளுடன் வேப்பங்குச்சிகளை வெட்டி தென்னை மரங்களுக்கு அருகில் மழைக்காலத்தில் நட்டு வைக்கலாம். வண்டுகளை கவர்ந்து இழுக்க உதவுகிறது.
விளக்குப்பொறி @ 1/எக்டர்
நடவின் போது, மண்ணில் மாலத்தியான் 5 D அல்லது என்டோசல்பான் 4 D மருந்து, 25 கிலோ இடவும். (மரம் ஒன்றுக்கு 10 D போரேட் மருந்து 100 கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 0.04% கரைசல் நனைக்கவும்) வருடத்திற்கு இருமுறை என ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் மருந்து இடவும்.

48. கரையான் தாக்கத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?
5% வேப்பெண்ணெய்யில் துணியை நனைத்து, தென்னை மரத்தின் அடித்தண்டில் 2 மீட்டர் உயரத்திற்கு சுற்றி வைக்கவும்.
1% காப்பர் சல்பேட் கரைசல் (அல்லது) 80% முந்திரி ஓடு எண்ணெய் அல்லது குளோர்பைரிபாஸ் @ 3 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 5% வேப்பெண்ணெய் அல்லது 20% வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து இலைகளில் கரையான் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்.
நாற்றங்காலை 0.05% குளோர்பைரிபாஸ் கரைசலில் 20-25 நாட்கள் இடைவெளியில் நனைக்கவும். தென்னை மரத் தண்டை அதே மருந்து கொண்டு பூசவும்.

49 தென்னை இலைகளின் மேற்ப்புரத்தில் எதனால் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகிறது?
கண்ணாடி இறகுப்பூச்சித் தாக்கத்தால், இலைகளில், வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும்.

50. எவ்வாறு கண்ணாடி இறகுப் பூச்சிகளை கண்டறிவது?
அடர் ஒட்டுகளுடன் வெள்ளை நிற குஞ்சுகள் வெள்ளை நிற வலையுடன் கூடிய கண்ணாடி இறகுகள் .

Address

672/12, N. C. Road
Trincomalee
31000

Telephone

+94765255525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salamah Farm House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category