P.V Pets shop

P.V Pets shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from P.V Pets shop, Pet service, Batticaloa.

Permanently closed.
நடுவதற்கு மட்டும் சாப்பாட்டுக்கு உகந்த சிவப்பு இன பயற்றம் பருப்பு விற்பனைக்கு உண்டுதொடர்புகளுக்கு0752709612
01/11/2022

நடுவதற்கு மட்டும் சாப்பாட்டுக்கு உகந்த சிவப்பு இன பயற்றம் பருப்பு விற்பனைக்கு உண்டு

தொடர்புகளுக்கு
0752709612

30/08/2022

மாடுகளுக்காண உணவாக பயண்படும் தவிடு விற்பனைக்கு உண்டு
0755800642

27/03/2022

#ஒருமாதம்_வயதுடைய_நாட்டு_கோழி
#கலவன்_குஞ்சுகள்_விற்பனைக்கு
#உண்டு_தேவையானவர்கள்_தொடர்பு
#கொள்ளவும்

#ஓடர்கள் ஏற்றுக்கொள்ள படும்.

𝐏𝐕 𝐏𝐞𝐭𝐬 𝐒𝐡𝐨𝐩
Arasaditheevu, Kokkadicholai,
Batticaloa
𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝙉𝙤.0755800642.
0761300642

11/12/2021
BAIRAHA 2000Chicks Available - 2021.12.10 to Batticaloa மட்டக்களப்பில் இன்னுமொரு தொகுதி வைரகா ப்ரோயிலர்ஸ் கோழிக்குஞ்சுகள...
08/12/2021

BAIRAHA 2000Chicks Available - 2021.12.10 to Batticaloa

மட்டக்களப்பில் இன்னுமொரு தொகுதி வைரகா ப்ரோயிலர்ஸ் கோழிக்குஞ்சுகள் வினியோகிக்கப்படவுள்ளன ....

Call for Egg Layer & Broiler Chicks:

PV Petshop
0755800642
0761300642
https://www.facebook.com/P.JitheesK/

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து ப...
29/10/2021

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு...

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர், "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? "

" 50 கோடி ரூபாய் "

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வ ந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின்னர் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு
இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் திணித்து விட்டு சென்று விட்டார்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக தன் அலுவலகத்திலுள்ள தனது அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.

கூட்டத்தில் வந்து அவர் பேச ஆரம்பித்தார்.
"நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால்
இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன.
மிகச் சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு
மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. அதிகப் பட்சமாக 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிகாலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? "

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? "

" இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?"

" இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு
தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து
கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் "

மௌனம் ....

ஒரு
நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச்சு வரவில்லை. நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயமாக முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது. அது
தான் நிதர்சனம் என்று நினைத்தார்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று
முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

படித்ததில் பிடித்தது.

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைநாட்டுக் கோழி வளர்ப்புவீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்...
07/10/2021

நாட்டுக் கோழி வளர்ப்பு முறை
நாட்டுக் கோழி வளர்ப்பு
வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.

குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.

வளர்க்கும் முறைகள்
நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.
பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.
முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.
பராமரிப்பு முறைகள்
பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.
48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி விற்றமீனை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.
வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.
அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகிவிடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.
நாட்டுக் கோழிகளின் வகைகள்
கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.
இனப் பெருக்கம்
நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.
முட்டையிடுதல்
முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சத்தத்தை எழுப்பும். அதை கேவுதல் என கூறுவர்.
கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.
ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.
அடை கட்டுதல்
நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.
அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடைகாக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.
கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.
அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடைகாக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொரிக்கும்.
நாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.
தீவனம்
ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.
நோய்த் தடுப்பு
நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.
தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. இந்த முறையில் நாட்டுக் கோழிகளைப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடியே முட்டைகளை சந்தைப்படுத்தியும், கோழிகளை விற்றும் பயன்பெறலாம்.
முதலீடு
ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

வருமானம்

ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்ல முறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்பு

இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.

புறோயிலர் கோழி வளர்க்க ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள். இன்றைய சூழ்நிலையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட ...
06/10/2021

புறோயிலர் கோழி வளர்க்க ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

இன்றைய சூழ்நிலையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட கூடிய ஒரு தொழில் இறைச்சி கோழி வளர்ப்பு. ஆனால் பலர் முதல் முயற்சியில் தோல்வி அடைந்ததால் அல்லது சரியான ஆலோசனை இல்லாததால் தொடர்ந்து செய்ய பயப்படுகிறார்கள்.
அதனால் நீங்கள் இந்த தொழிலை ஆரம்பிக்க முதல் சில விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

1) நீங்கள் வளர்க்க விரும்பும் இனத்தை சரியாக தெரிவு செய்து கொள்ளுங்கள்,
இன்று புறோயிலர் கோழிகளில் எமது நாட்டில் நிறைய Breederகள் உள்ளன பிறிமா, பைரா, CIC, அலாடீன், என பல வகை மட்டக்களப்பில் அல்லது பிற மாவட்டங்களில் கூட இந்த breederகள் கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றும் விலைகளில் அதிகம் வித்தியாச படுகின்றன.
காரணம் ஒவ்வொரு breederகளும் சில சிறப்பம்சங்கள் அல்லது குறைபாடுகளை கொண்டுள்ளன. சில இனங்கள் வெப்பத்தை நன்கு தாங்க கூடியவை, சில breederகள் கலப்பின குஞ்சுகளை கொண்டிருக்கும், மேலும் குளிர் தாங்க கூடியவை, இலகுவில் நோய் தொற்றுக்கு ஆளாகதவையாகவும் இருக்கும்.
அதனால் முதலில் நீங்கள் முதலில் சரியான ஒரு தெரிவை செய்ய வேண்டும்,
திக இறகுகளை கொண்டிருக்காது. இவற்றின் தோல் அதிகம் வெளியே தெரிய கூடியதாக இருக்கும். இவை வெப்பத்தையும் குளிரையும் தாங்க முடியாதவை. இந்த காரணத்தால் இலகுவில் இறக்க ஆரம்பித்து விடும். அல்லது எடை அதிகரிப்பு இல்லாதவையாக காணப்படும்.
மேலும் சில இனங்கள் வளரும் போது ஒவ்வொரு கோழிகளும் ஒவ்வொரு அளவுகளில் இருக்கும். ஒரு காரணம் கலப்பின குஞ்சுகள். ஒவ்வொரு இனமும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் தான் வளரும். கலப்பின குஞ்சுகள் வேறு வேறு இனங்களை கொண்டிருப்பதால் வளரும் போது அநேக கோழிகள் அளவிலும் நிறையிலும் பெரிதும் வேறு படும். உங்களுக்கு கிடைக்க கூடய chicken Feed, நீங்கள் பாவிக்க போகும் கூடுகள், கூடுகளை சுற்றி உள்ள சூழல் என எல்லா இதயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்,
உதாரணமாக இறகுகள் அதிகம் உள்ள கோழிகள் அதாவது இறகுகள் உடலை நன்கு சூழ்த்து காணப்படும் இனங்கள் எல்லா சூழலிலும் வாழ கூடியவை. எனவே ஆரோக்கியமான இனத்தை நேரமெடுத்து தெரிவு செய்யுங்கள்.


2)உங்களுக்கு கிடைக்க கூடய chicken Feedஇனை முடிந்தவரை ஒரு கிழமைக்கு தேவையானதை மட்டும் வாங்கி கொள்ளுங்கள்.
முடிந்தவரை அருகில் உங்களால் பெற கூடிய chicken Feed ( Prima choice, Prima, CIC,Pro feed, Gold Coin) இனை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் முப்பது நாட்களில் FEED காலாவதி ஆகிவிடும், அதனால் ஒவ்வொரு கிழமையும் புதிதாக வாங்குவது நல்லது, காலாவதி திகதியை எப்பொழுதும் கவனியுங்கள்.
காலாவதி திகதி நெருங்க நெருங்க FEEDஇன் வீரியம் குறையும்.

3)மருந்துகள் பற்றிய ஆலோசனை
இன்று அதிக மருந்து வகைகள் கோழிகளுக்காக சந்தையில் கிடைகின்றன. ஒவ்வொரு மருந்துகளும் பலவிதமாக சித்தரிக்க படுகின்றன. அதனால் தகுந்த ஆலோசனையுடன் மருந்துகளை கையாளுங்கள், மருந்துகள் வைப்பதற்கான காரனகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
பின்பு ஆரம்பியுங்கள்.

4)நீங்கள் பாவிக்க போகும் கூடுகளை தெரிவு செய்யுங்கள்.
சிலர் நில கூடுகளை பாவிக்கலாம், சிலர் நகர்த்த கூடிய கூடுகளை பாவிக்கலாம், எதுவாக இருந்தாலும் கோழிகளின் எண்ணிக்கைக்கும் அளவுகளுக்கு உஹந்ததை பயன்படுத்துங்கள்.
முதல் 18 நாட்களுக்கு கோழி குஞ்சுகளுக்கு வெப்பம் தேவை, குளிர் ஆபத்தானது, அதனால் நெருக்கமாக இருந்தால் நல்லது, ஆனால் அதன் பிறகு 45 நாள் வரை நெருக்கமாக இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். வளர்ந்த ஒரு கோழிக்கு 1 சதுர அடி இடம் தேவை.
மேலும் கூடுகளை அமைக்கும் போது இலகுவாக சுத்தம் செய்ய கூடியதாக அமையுங்கள், எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமாக கவனித்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு கோழிகள் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல நிறையையும் எட்டும்.
இலகுவாக திறந்து மூட கூடியதாகவும் உணவுகளை மாற்ற கூடியதாகவும் அமையுங்கள், முடிந்தவரை கோழிகளை கலவர படுத்தாது செயட்படுகளை மேற்கொள்ள கூடியாதாக இருந்தால் இன்னும் சிறந்தது.
கூடுகளை மாற்றும் போது நன்றாக சுத்திகரித்து காய விட்டு பின்பு மாற்றுங்கள்.
Brooding செய்ய தனியான கூடுகளை பாவியுங்கள்.

5)கூடுகளை சுற்றி உள்ள சூழல்
அருகில் சத்தங்கள் அதிகம் இல்லாத அமைதியான இடம் மிக சிறந்தது. நல்ல மரங்கள் உள்ள சுவாத்தியமான இடத்தில் கூடுகளை அமையுங்கள், நிழல் அதிகம் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும். வேறு விலங்குகளின் தொல்லை இல்லாத இடங்களை தெரிவு செய்யுங்கள்.

6)முற்கூட்டியே திட்டம் போடுங்கள்
நீங்கள் வளர்க்க ஆரம்பிக்கும் கோழிகளின் எண்ணிக்கையை முன்னரே திட்டமிடுங்கள். எப்போதும் உணவுக்கான செலவு தான் மற்ற செலவுகளை விட அதிகமானதாக இருக்கும்.
உதாரணமாக 50 கோழிகள் வளர்க்க ஆரம்பிக்க தொடங்கினால் அண்ணளவாக செலவு பின்வருமாறு அமையும்
கோழி குஞ்சுகள் - 5 x 150 = 7500ரூபாய் (150ரூபாய் என்பது அண்ணளவான ஒரு விலை, இறைச்சியின் விலையை பொறுத்து குஞ்சுகளின் விலை ஒவ்வொரு கிழமையும் மாறும்.)
உணவு - 18000 ரூபாய்
மின்சாரம் - 1500 ரூபாய்
மருந்துகள் - 1800 ரூபாய்
மொத்தம் = 27000 ரூபாய்
அண்ணளவாக 30000 ரூபாய் தேவை
ஆனால் முழுமையாக வளர்ந்து இறைச்சியாக விற்கும் போது கிலோ 600 ரூபாய் படி ஒரு கோழியில் குறைந்தது 2 கிலோ இறைச்சி படி 55000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

7)மின்சார வசதி
ஆரம்பத்தில் 14 நாட்களுக்கு குஞ்சுகளுக்கு வெப்பத்துகாக 100w மின்குமிழ் கட்டாயம் தேவை, அதனால் மின்சார வசதி எப்போதும் இருக்குமா என சிந்தியுங்கள், அல்லது அரிக்கன் லாம்பு ஒன்றை மின்வெட்டின் போது பயன்படுத்தலாம்.

8)சுத்தம்
எப்போதும் கோழி கூடுகளுக்கு அருகில் சுத்தமான சூழலை பேணுங்கள், உங்கள் கூடுகளின் உள்ளே அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், நீங்கள் பாவிக்கும் நீர் வைக்கும் பாத்திரம், உணவு வைக்கும் பாத்திரங்களை நன்றாக சுத்தப்டுத்துகள். இலையான் மொய்க்கதவாறு பராமரியுங்கள்.

9)தொடர்ந்து வளருங்கள்
ஒரு முறை வளர்த்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வளர்க்காதீர்கள். ஒவ்வொரு கிழமையும் குறிப்பிட்ட அளவிலான கோழிக் குஞ்சுகள் வாங்குங்கள். அப்போது தான் உங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் உங்கள் கைகளில் இருப்பார்கள். உங்களாலும் தொடந்து லாபமீட்ட முடியும்.

10)ஆரம்பிக்க முன்பு ஆலோசனை
வீடுகளில் வளர்க்க ஆரம்பிப்போர் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுங்கள், வளர்க்கும் இடங்களுக்கு சென்று நேரடியாக பார்வையிடுங்கள், எந்த ஒரு தொழிலும் நீங்கள் எடுக்கும் முயற்சியை பொறுத்து தான் உங்களுக்கு லாபத்தை தரும். எனவே உங்கள் நேரத்தையும் பணத்தையும் பயன்படுத்த முதல் எல்லா விடயங்களையும் தெரிந்து கொண்டு பின்பு ஆரம்பியுங்கள்.

சுகாதாரமான முறையிலான, எந்த வித இரசாயனப்பதார்த்தங்களும் சேர்க்கப்படாது, எம்மாலேயே.  45-65 நாட்களுக்கு மேல் வளர்க்கப்படும்...
28/09/2021

சுகாதாரமான முறையிலான, எந்த வித இரசாயனப்பதார்த்தங்களும் சேர்க்கப்படாது, எம்மாலேயே. 45-65 நாட்களுக்கு மேல் வளர்க்கப்படும் சுத்தமான, சுகாதாரமான Organic முறையிலான வைரகா இறைச்சி, நாட்டுகோழி மற்றும் முட்டை கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

நஞ்சற்ற உணவுகள், எம் ஆரோக்கியமான வாழ்க்கையின் முதற்படி🍗🐓🐔

PV Chicken Shop
9ம் குறுக்கு வீதி, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை

PV Petshop
0755800642
0761300642
https://www.facebook.com/pv.petshop.5

BAIRAHA CHICKEN ONLYசுகாதாரமான முறையிலான, எந்த வித இரசாயனப்பதார்த்தங்களும் சேர்க்கப்படாது, எம்மாலேயே.  45-65 நாட்களுக்கு...
24/09/2021

BAIRAHA CHICKEN ONLY

சுகாதாரமான முறையிலான, எந்த வித இரசாயனப்பதார்த்தங்களும் சேர்க்கப்படாது, எம்மாலேயே. 45-65 நாட்களுக்கு மேல் வளர்க்கப்படும் சுத்தமான, சுகாதாரமான Organic முறையிலான #கோழி இறைச்சியை பெற்றுக்கொள்ளலாம்.

நஞ்சற்ற உணவுகள், எம் ஆரோக்கியமான வாழ்க்கையின் முதற்படி🍗🐓🐔

PV Chicken Shop
9ம் குறுக்கு வீதி, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை

PV Petshop
0755800642
0761300642
https://www.facebook.com/pv.petshop.5

Address

Batticaloa

Telephone

+94761300642

Website

Alerts

Be the first to know and let us send you an email when P.V Pets shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category