Paana Duna Integrated Farms

Paana Duna Integrated Farms Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Paana Duna Integrated Farms, Pet service, 34/1, sedan kinatru Street, Tiruttangal.

Multipurpose Favour Block Flooring for 4000 Sq. Feet
01/07/2019

Multipurpose Favour Block Flooring for 4000 Sq. Feet

Welcome boy to our Family
10/09/2018

Welcome boy to our Family

Lovers day born - Heartin shape on head
15/02/2017

Lovers day born - Heartin shape on head

இன்று எங்கள்  பண்ணையில் பெண் கன்று பிறந்துள்ளதால் அக்கன்றுக்கு "சசி" என்று பெயரிட்டுள்ளேன்......!
14/02/2017

இன்று எங்கள் பண்ணையில் பெண் கன்று பிறந்துள்ளதால் அக்கன்றுக்கு "சசி" என்று பெயரிட்டுள்ளேன்......!

15/01/2017
17/02/2016
அழிந்துவரும் நாட்டு மாடுகள் பாதுகாத்து வளர்பதின் அவசியம் என்ன.? A-2 பற்றி தெரியுமா.?தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்...
08/11/2015

அழிந்துவரும் நாட்டு மாடுகள் பாதுகாத்து வளர்பதின் அவசியம் என்ன.? A-2 பற்றி தெரியுமா.?

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நாட்டு மாடுகள் இழப்பால் ஏற்பட்டவை என்பதும், அவற்றை மீட்பதால் நல்ல விளைவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதும் நிதர்சனமான உண்மை.!

நாட்டு மாட்டு பாலில் மனிதர்களை தொற்றும் நோய் மூலக்கூறு உடைய A1புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது).

நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள் ஸ்காலரில் தேடி படிக்கவும்.

இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்..?

மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.

திருநீறு :-

இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள். சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.

காணமல் போன காராம்பசு.!

காராம்பசு என்பது ஒரு தனி இனமல்ல. நாட்டு இன மாடுகளுக்கு பிறக்கும் கன்று குட்டிகளில் நாக்கு முதல் மடி காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் "காராம்பசுக்கள்' என்று அழைக்கப் படுகின்றன. இவைகள் ஈனும் கன்றுகள் கூட சமயங்களில் காராம்பசுவாக இருப்பதுண்டு. இப்படி அரிதாகப்பிறக்கும் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பால் கெட்டியாகவும், இதிலிருந்து தயாரிக்கப்படும் நெய் வாசனையுடனும் இருக்கும். அக்காலங்களில் புகழ்பெற்ற கோயில்களில் காராம்பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட காராம்பசுவின் பாலை வழிபாட்டிற்கு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
இன்றைய நிலையில் தமிழகத்தில் ஐந்திற்கு மேல் காராம்பசுக்கள் இருப்பது அரிதே. அதனால்தான் இந்த பசுமாடு ஒன்றின் விலை 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. தாராபுரம் பகுதியில் சில விவசாயிகள் காராம்பசுவை வளர்த்துவருகிறார்கள்.
முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.

நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லை எனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.

வெள்ளாடு வளர்ப்புமிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம்....
06/11/2015

வெள்ளாடு வளர்ப்பு

மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.

வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப்பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும். உலக சுகாதார நிறுவனப் கருத்துப்படி பசும்பாலை அருந்துவதால் வயிறு, தோல், காது போன்றவற்றில் வரும் ஒவ்வாமை 70 சதவிகிதம் பசும்பாலினால் வருவதில்லை. வரலாற்றுக்கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட மிருகம் ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல், போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்

வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.

கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது. கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.

வெள்ளாட்டு இனங்களின் தெரிவு
மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.

வயது முதிர்ந்த ஆடுகள் வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும். இந்த அளவுக் குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும்.

இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்கவேண்டும்.

ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.

(ஆதாரம்: Kerala Agricultural University)

A new comer..HF..6 teeth..3rd lactation..15+ Lt..60 k..
22/10/2015

A new comer..
HF..
6 teeth..
3rd lactation..
15+ Lt..
60 k..

New comer..Four teeth..First lactation..HF cross..9+ litre..40 k..
23/09/2015

New comer..
Four teeth..
First lactation..
HF cross..
9+ litre..
40 k..

New born today.. its a boy..! 😜
16/08/2015

New born today.. its a boy..! 😜

Address

34/1, Sedan Kinatru Street
Tiruttangal
626130

Telephone

9786786433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paana Duna Integrated Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category