Pariventhan Stray Dogs Shelter&Services

Pariventhan Stray Dogs Shelter&Services It's a limited stray dog shelter. My wife and I maintain it together.

We do our best to help not only our foster dogs but also local dogs staying in other homes.We will gradually expand our service.

18/06/2026

எம் காப்பக தொழிற்பாடுகளின் ஓர் அங்கமாக கட்டணத்துடன் கூடிய சேவைகளை தொடங்கியுள்ளோம்.உங்கள் வீட்டில் உள்ள நாய்களுக்கான சேவையாக இது உள்ளது.குளிர்க்க வார்ப்பது,மருத்துவ தேவைகளை பெற்றுக்கொடுப்பது,கருத்தடை சத்திரசிகிச்சையை செய்வது போன்ற நாய்கள் தொடர்பான அனைத்து தேவைகளையும் குறைவான கட்டணத்துடன், நேர்த்தியாக செய்து தருகிறோம்.நேரடியாக எம்மை தொடர்புகொள்ளுங்கள்.எதிர்காலத்தில் இன்னும் பல சேவைகளை எம் காப்பகம் வழங்க உத்தேசித்துள்ளது.
👉பாரிவேந்தன் தெரு நாய்கள்
காப்பகம் மற்றும் சேவைகள்👈
🚩அராலி வீதி,சங்கானை,
யாழ்ப்பாணம்,இலங்கை.
👉0094 076 546 6459
#தெருநாய்களுக்கானசேவைகள் #யாழ்ப்பாணம் #சங்கானை

17/06/2026

தங்கமே தங்கமே எங்கட இளவரசி தங்கமே... . #ஜீவகாருண்யம் #தெருநாய்கள் #இலங்கை #யாழ்ப்பாணம் #சமூகசேவை # #யாழ்

எம் காப்பக நலன் விரும்பிகளே!எம் காப்பகத்தை ஒரு சிறந்த நிர்வாக அமைப்பாக முன்னெடுத்து செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்."பிரச்...
14/06/2026

எம் காப்பக நலன் விரும்பிகளே!

எம் காப்பகத்தை ஒரு சிறந்த நிர்வாக அமைப்பாக முன்னெடுத்து செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்.

"பிரச்சினைகள் தீர்ந்த பின் இதைப் பார்த்துக்கொள்ளலாம்" என்று இவ்வளவு காலமும் காத்திருந்தோம். ஆனால் இந்த நாட்டில் ஒரு பிரச்சினை தீர்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதை அனைவரும் அறிவோம்.

அதிலும், எமது பிரச்சினை தெரு நாய்கள் சம்பந்தப்பட்டதாகும். இவர்களுக்கு நீதியை யாரும் வழங்க மாட்டார்கள் என்பதை நாம் போராடிய நாட்களின் அனுபவத்தில் கற்றுக்கொண்டோம்.

எனவே, தனி மனிதர்களாக இந்த நாட்டின் தெரு நாய்களுக்காக போராடுவது மிகவும் கடினமானது என்பதால், எமக்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் எமது சேவையை ஒரு அறக்கட்டளையாகப் பதிவு செய்து, அங்கீகாரத்துடனும் அதிகாரபூர்வமான முறையிலும் முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.

அறக்கட்டளையாகப் பதிவு செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதால், அந்த வழியிலேயே செல்ல விரும்புகிறோம்.
இதன் மூலம் எம் காப்பகம் மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையைப் பெறும். அதேவேளை, எம் ஜீவன்களை சிறப்பாக பராமரிப்பதற்குத் தேவையான நிதி உதவிகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகும்.

அது மட்டுமல்லாமல், எம் காப்பகத்தின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு உருவாக்கப்பட்டால், வெளிநாடுகளில் இருந்து உதவிகளை அனுப்பும் உறவுகளுக்கும் பல நடைமுறை வசதிகள் கிடைக்கும்.

இது மட்டுமன்றி, அறக்கட்டளையாகப் பதிவு செய்வதன் மூலம் இன்னும் பல நன்மைகள் எமக்கு கிடைக்கும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த அறக்கட்டளைப் பதிவு தொடர்பாக எமது வழக்கறிஞருடன் பேசியிருந்தோம். ஆனால் அதற்குத் தேவையான நிதி இல்லாத காரணத்தால், அந்த முயற்சியும் இதுவரை முன்னேற முடியாமல் போயுள்ளது.

இந்தப் பதிவை மேற்கொள்ள சுமார் இலங்கை ரூபா 65,000/- செலவாகும்.
இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், ஒரு மாத காலத்திற்குள் அறக்கட்டளைப் பதிவை நிறைவு செய்ய முடியும் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த முயற்சிக்கு யாரேனும் உதவ விரும்பினால், அது எமக்கு மிகப் பெரிய ஆதரவாக இருக்கும்.

இதற்கு மேலாக, எமக்கு இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது. உறவுகள் வழங்கும் உதவிகளைத் தாண்டி செலவுகள் அதிகரித்து வருவதால், சில நேரங்களில் கடன் பெற வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் எம்மால் வழக்கமான வேலைகளுக்குச் செல்லவும் முடியவில்லை.

எம்மை நம்பி வாழும் ஜீவன்களைப் பராமரித்து, அவர்களுக்கு தேவையான பணிவிடைகளைச் செய்வதற்கே எம் இருவரின் ஆற்றலும் நேரமும் முழுமையாக செலவாகி வருகிறது.

கடன் சுமை, உடல்நலக் குறைபாடுகள், எம்மை நம்பியுள்ள ஜீவன்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும் மனவேதனை, மன அழுத்தம் என பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

இவற்றிற்கெல்லாம் குறுகிய காலத்தில் ஒரு தீர்வு கிடைத்து, நாமும் எம்மை நம்பியுள்ள ஜீவன்களும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதே எமது ஒரே விருப்பமாகும்.

தற்போதைய நிலைமை தொடர்ந்தால், எமக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எம்மை நம்பியுள்ள ஜீவன்கள் அநாதைகளாகி விடுவார்கள் என்ற எண்ணமே எம்மை மிகவும் கவலையடையச் செய்கிறது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையை நினைத்துப் பார்க்கவே எமக்கு முடியவில்லை.

எம்மை நம்புபவர்கள் நம்புங்கள். எம் உடலில் உயிரும் பலமும் இருக்கும் வரை, இந்த நாட்டின் தெரு நாய்களின் நலனுக்காக எமது பயணம் தொடரும்.

"இந்த அறக்கட்டளைப் பதிவிற்காக உதவ விரும்புவோர் எம்மை நேரடியாக தொடர்புகொள்ளலாம்".

🐶பாரிவேந்தன்
தெருநாய்கள் காப்பகம் மற்றும் சேவைகள்
🚩அராலி வீதி,சங்கானை,
யாழ்ப்பாணம்,இலங்கை.
🔴0094 076 546 6459

Dear Supporters,

We have decided to take an important step towards strengthening and sustaining our shelter by registering it as a legally recognized charitable trust/foundation.

For a long time, we believed that once our ongoing challenges were resolved, we could focus on this registration process. However, experience has taught us that resolving issues related to street dogs can take years, and justice for these innocent animals is often overlooked.

As individuals, it is becoming increasingly difficult to continue this mission alone. Therefore, we wish to establish our service as a registered charitable organization, giving us a stronger identity, legal recognition, and greater ability to advocate for street dogs.

Why is Registration Important?

Registering our shelter as a charitable trust/foundation will:

✅ Increase public trust and credibility.

✅ Help us obtain financial support more easily.

✅ Allow us to open an official bank account in the shelter's name.

✅ Create opportunities for local and international donations.

✅ Ensure the long-term sustainability of our work.

✅ Strengthen our ability to represent and protect street dogs through recognized channels.

Registration Cost

The total cost required to complete the registration process is:

LKR 65,000/=

According to our lawyer, once the required funds are available, the registration can be completed within approximately one month.

We Need Your Help

If anyone is willing to support this important initiative, your contribution will make a significant difference.

Apart from this registration, we face daily expenses related to food, medical treatment, shelter maintenance, and the welfare of the animals under our care. Due to increasing costs and limited resources, we have often been forced to rely on loans to continue our work.

At present, both of us dedicate nearly all our time to caring for the animals, leaving little opportunity for regular employment.

Our Commitment

Despite financial difficulties, health concerns, emotional stress, and countless challenges, we remain committed to the animals who depend on us.

Our greatest hope is to secure a stable future for these dogs and ensure that they continue to receive care, protection, and love.

If the current situation continues, we fear what may happen to these animals should anything happen to us. The thought of them becoming abandoned and helpless is heartbreaking.

To Those Who Believe in Our Mission

As long as we have strength and life within us, we will continue this journey for the welfare of Sri Lanka's street dogs.

❤️ Your support today can help secure a better future for countless innocent lives.

🐶Pariventhan stray dogs shelter&service
🚩Araly road,chankanai,jaffna,srilanka
0094 765466459

#யாழ்ப்பாணம் #சங்கானை #ஆதரவற்றநாய்கள் #ஜீவகாருண்யம் #தெருநாய்களுக்கு_உதவுங்கள்

யாழில் இயங்கும் Save life எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தின் சங்கானை எனும் பிரதேசத்தில் வ...
30/03/2026

யாழில் இயங்கும் Save life எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தின் சங்கானை எனும் பிரதேசத்தில் வீதிகளில் நிற்கும் தெரு நாய்களுக்கு "இரவில் ஒளி பட்டு மிளிரக்கூடிய" கழுத்து பட்டிகள் சிலவற்றை முன்னோட்ட திட்டமாக அணிவித்தார்கள்.இதனால் இரவில் வீதிகளில் நாய்கள் நின்றால் வாகனங்களில் செல்வோருக்கு நாய்கள் நிற்பதை அடையாளம் காணக்கூடியதாக இருப்பது மட்டுமின்றி நாய்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க முடியும்.இந்த செயற்பாட்டில் எம் காப்பகம் ஈடுபட்டமை நினைத்து பெருமிதம் கொள்வதோடு, எமக்கான சிறிய அங்கிகாரம் கிடைத்துள்ளமை காப்பகத்தின் அடுத்த கட்ட முன்னேற்றை பிரதிபலிக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

🐶🆘 Parvo Virus & Canine Distemper – நாய்களின் உயிரைக் காக்க உடனடி தடுப்பூசி உதவி தேவை கோருகிறோம்.Parvo Virus மற்றும் Can...
13/02/2026

🐶🆘 Parvo Virus & Canine Distemper – நாய்களின் உயிரைக் காக்க உடனடி தடுப்பூசி உதவி தேவை கோருகிறோம்.

Parvo Virus மற்றும் Canine Distemper என்பது குறிப்பாக குட்டி நாய்களை சில நாட்களிலேயே உயிரிழக்கச் செய்யும் மிகக் கொடிய வைரஸ் நோய்கள்.

இந்த நோய்கள் ஏற்பட்டால்
கடுமையான வாந்தி, இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு,
காய்ச்சல், இருமல், fits (நரம்பு நடுக்கம்),
நிரந்தர ஊனமுறுதல் அல்லது மரணம் வரை ஏற்படலாம்.

👉 இந்நோய்களுக்கு மருந்து இல்லை
👉 தடுப்பூசி மட்டுமே ஒரே பாதுகாப்பு

நாங்கள் பராமரிக்கும் நாய்களுக்கு
Parvo & Distemper – 2 தடுப்பூசி போட
முதல் கட்டத்திற்கு உடனடி நிதி உதவி தேவை.

💉 ஒரு நாய்க்கு (2 தடுப்பூசி) செலவு :
ரூ. 3,950/=
🐾 மொத்த நாய்கள் : 49
💰 முதல் கட்டத்திற்கு தேவையான மொத்த தொகை : ரூ. 193,550/=

தற்போது நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால்
உடனடியாக தடுப்பூசி போட வேண்டிய அவசரம் உள்ளது.இதனால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (2026.02.15) அதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது...

❤️ உங்கள் சிறிய உதவி – ஒரு நாய் உயிரைக் காப்பாற்றும்
முடியாவிட்டாலும் தயவுசெய்து இந்த செய்தியை Share செய்யுங்கள்.

பாரிவேந்தன் தெரு நாய்கள்
காப்பகம் மற்றும் சேவைகள்.
அராலி வீதி,சங்கானை,
யாழ்ப்பாணம்,இலங்கை.
(0094)765466459

நான் 100 பின்தொடர்பவர்களை பெற்றுள்ளேன்! தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் இல்லாமல் இந்தச் சாதனையை என்னா...
01/02/2026

நான் 100 பின்தொடர்பவர்களை பெற்றுள்ளேன்! தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் இல்லாமல் இந்தச் சாதனையை என்னால் செய்திருக்க முடியாது. 🙏🤗🎉 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

31/01/2026

எம் கருத்தை யாரும் கேட்க மறுக்கிறார்கள்.நியாயம் கேட்டால் தட்டிக்கழிக்கிறார்கள் அரச ஊழியர்கள்.

25/01/2026

சிங்களத்து சின்ன குயின் லீனு
முதல் முறையாக இவளுடன் இன்னொரு ஆண் சேர்த்து வளர்க்க தொடங்கிய எம் பணி இன்று வரை தொடர்கிறது...

Address

Araly Road, Chankanai
Jaffna
40212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pariventhan Stray Dogs Shelter&Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share